முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரும்பும் வரை விளையாடுங்கள்: டெண்டுல்கருக்கு அட்வைஸ்

புதன்கிழமை, 19 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. 19 - விளையாட்டு வீரர்களுக்கு 40 வயது ஒரு தடையல்ல. நீங்கள் விரும்பும் வரை விளையாடுங்கள் என்று டெண்டுல்கருக்கு உலக சதுரங்க சாம்பியனா  ன விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை வழங்கி  இருக்கிறார். டெண்டுல்கர் சமீப காலமாக மோச மாக ஆடி வருவதால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள்  பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்த து. இதில் டெண்டுல்கர் ஒரு முறை அரை சதம் அடித்தார். மற்ற ஆட்டத்தி ல் குறைந்த ரன்னில் அவர் அவுட்டா  னார். 

எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 4 -வது டெஸ்ட் முடிந்ததும் டெண்டுல்கர் ஓய்வு பெற லாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இருந்த போதிலும், டெண்டுல்கர் தனது ஓய்வு முடிவு பற்றி இதுவரை உறுதி யான முடிவை தெரிவிக்க வில்லை. தொடர்ந்து விலயாடவே அவர் விருப்ப ம் கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் மாற்றுத் துறையில் இருந்து அவருக்கு ஆதரவு கிடைத்து இருப் பது ஆச்சரியமளிக்கிறது. உலக சதுரங்க சாம்பியனான ஆனந்த் தொடர்ந்து விளையாடுமாறு டெண்டுல்கருக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார். 

விமர்சனங்கள் குறித்து கவலை கொள்ளக் கூடாது என்றும், 40 வயது ஒரு தடை அல்ல என்றும் தான் இன்னும் ஒரு சில ஆண்டுகள் விளையாடப் போவதாகவும் அவர் தெரிவித்து இருக் கிறார். 

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொ ல்கத்தாவில் நிருபர்களைச் சந்தித்த உல க சாம்பியனான ஆனந்த் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற் கண்டவாறு தெரிவித்தார். 

43 வயதான ஆனந்த் கொல்கத்தாவில் நடைபெற்ற சதுரங்க முன்னேற்ற நிகழ் ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது இடையே மேற்கண்டவாறு கூறினார். 

சென்னை வீரரான ஆனந்த் இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென் று இருக்கிறார். மேலும், முடிந்த வரை சர்வதேச அளவில் முக்கிய பட்டம் பெற முடிவு செய்து இருக்கிறார். 

1988 -ம் ஆண்டு உலக கிராண்ட் மாஸ் டர் பட்டத்தை முதல் முறையாக பெற் று  இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது குறிப்பி டத்தக்கது. 

மேலும், விமர்சனங்கள் நல்லது தான். ஆனால் இதற்காக விளையாட்டை நிறுத்தக் கூடாது. நீங்கள் விரும்பும் வரை விளையாட வேண்டும். விளை யாட்டில் இளைஞர்கள் தான் இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல. நான் இன்னும் செஸ் விளையாட விரும்புகி றேன் என்றும் அவர் கூறினார். 

நான் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்து இருப்பது எனக்குள்ள அதிர் ஷ்டமாகும். அதை நான் நன்கு பயன் படுத்துகிறேன். அதே போல நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என் றும் அவர் தெரிவித்தார் 

நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இது ஒரு வேடிக்கையான கேள்வியாகும். இத னால் இருவரும் ஓய்வு பெறத் தேவை யில்லை. இது போன்ற கேள்விகளைக் கண்டு அலட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். 

நானும் டெண்டுல்கரும் நீண்ட கால மாக விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் ஏராளமான லியாண்டர் பயசை பார்த்திருக்கிறேன். செளரவ் கங்குலியை சந்தித்து இருக்கிறேன். ஆனால் நாங்கள் இருவரும் தொடர்ந்து ஆடிக் கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 

தவிர, டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டிற்கு உடல் வலுவாக இரு க்க வேண்டும். சதுரங்கத்திற்கு அப்படி அல்ல. நான் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து ஆடி மேலும் பல பட்டம் வெல்ல முடிவு செய்து இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்