முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் தோல்வி: தோனியை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள்

புதன்கிழமை, 19 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, டிச. 19 - இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரை இழந்தது தொடர்ந்து கேப் டன் பதவியில் இருந்து தோனியை மா ற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் க ள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ் டார் குக் தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமயிலான அணிக்கு எதிராக விளையாடியது. 

4 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை இங்கிலாந்து 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் தோனியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. 

இங்கிலாந்து அணி கடந்த 1985 -ம் ஆண்டு கேப்டன் டேவிட் கோவர் தலைமையில் இந்தியாவில் தொடரை வென்றது. அதன் பிறகு குக் தலைமை யில் டெஸ்ட் தொடரை இங்கிலந்து வென்று உள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்தியா பெரும்பாலும் இழந்தது கிடையாது. எனவே இது தோனி தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப் பய ணங்களில் டெஸ்ட் தொடரை இழந்து ள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான பயண த்தில் 4- 0 என்ற கணக்கிலும், ஆஸ்திரே லியாவுக்கு எதிராக 4 - 0 என்ற கணக்கி லும் தொடரை இழந்தது. 

ஆனால் உள்நாட்டுத் தொடரில் இந்தி யா வெற்றி பெற்று வந்தது. தோனி தலைமையில் கடந்த ஒரு ஆண்டு கால மாக இந்தியா டெஸ்ட் தொடரில் வெ ற்றி பெற முடியவில்லை. 

இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்ட னம் தெரிவித்து உள்ளனர். மொகிந்தர் அமர்நாத், கவாஸ்கர்  மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

டெஸ்ட் தொடரில் தொடர்ந்து தோல் வி அடைந்து வருவதால் தோனியை மாற்றி விட்டு அவருக்குப் பதிலாக விராட் கோக்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோ சனை தெரிவித்து உள்ளனர். 

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தோ னியை மாற்ற வேண்டும் என்று தேர்வு க் குழுவினர் 5 பேர் கருத்து தெரிவித்த தாகவும், ஆனால் தேர்வுக் குழுத் தலை வர் ஸ்ரீனிவாசன் இதில் தலையிட்டு தோனிக்கு ஆதரவு தெரிவித்தாக அமர் நாத் குற்றம் சாட்டி இருந்தார். 

தற்போது தோனியை கேப்டன் பதவி யில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்  கவாஸ்கர், ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீரர் அதுல் வாசன் போன்றவர்கள் கருத்து தெரிவி த்து உள்ளனர். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அகம தாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்றது. 

அடுத்த நடந்த மும்பை மற்றும் கொல் கத்தா டெஸ்டில் அடுத்தடுத்து தோல் வி அடைந்தது. நாக்பூர் டெஸ்ட் டிரா வில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.  

கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததும், இதே போன்று தோனியை நீக்க வேண்டும் என்ற கோ ரிக்கை எழுந்தது. ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று தோனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

இதற்கும் தேர்வுக் குழு முன்னாள் தலைவர் மொகிந்தர் அமர்நாத் கண்ட னம் தெரிவித்து இருந்தார். தோனிக்கு தற்போதைய தலைவர் ஸ்ரீனிவாசன் ஆதரவு தெரிவித்து வருவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் தோனிக்கு நெருக் கடி முற்றுகிறது. அவரது கேப்டன் பத வி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்