முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசார் சுதந்திரமாக செயல்பட எந்த குறுக்கீடும் இருக்காது

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுவது தமிழக காவல் துறைதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட எந்த குறுக்கீடும் இருக்காது என்று உறுதியளித்துள்ளார். மேலும் காவல் துறையினர் திடமாக, திறனுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இது குறித்து விபரம் வருமாறு:-

சென்னையில் கடந்த 2 நாட்களாக, மாவட்ட ஆட்சியர் மற்றும், காவல்துறையினருக்கான கூட்டுகூட்டம் நடைபெற்றது. இதையடுதது நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

நாம் முதல்நாள் நடத்திய ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், சட்டம் -​ஒழுங்கு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முதலிய, முக்கியமான பொருண்மைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம் என்பது நுணுக்கமாக அலசி ஆராயப்பட்டது.  தற்போது நாம் காவல்துறை தொடர்பான பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்தி விவாதிக்க இருக்கின்றோம்.

காவல்துறை தொடர்பானவையைப் பொறுத்தமட்டில், நாட்டிலேயே பலவற்றிற்கு தமிழ்நாடு முன்னுதாரணமாகவும், முதன்மையாகவும் உள்ளது என்பதை பெருமைடையுடன் சொல்லிக்கொள்வது பொருத்தமுடையதாகும்.  காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தை நான் 1991​இல் துவங்கி வைத்தேன்.  இதனை முன்னோடியாகக் கொண்டு, இதே போன்ற திட்டம், 2001 ஆம் ஆண்டு மத்திய அரசாலும் அறிமுகப்படுத்தப்பட்டது.  

நான் முதல்முறை முதலமைச்சராக இருந்த காலத்தில் ாஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள்ா என்ற சிந்தனைக்கு 1992 ஆம் ஆண்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.  தமிழ்நாட்டின் கடற்கரையோர பகுதிகள் நெடுக முனைப்பான கண்காணிப்பை உறுதி செய்யும் பொருட்டு ாகடற்பகுதி பாதுகாப்புக் குழுவைா 1994 ஆம் ஆண்டில் எனது அரசு மீண்டும் ஆரம்பித்தது.  11 ஆண்டுகளுக்குப் பின்னரே இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கத் துவங்கியது.  

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முறை நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட போது உருவானது.  2002​ஆம் ஆண்டில் அவசர விபத்து நிவாரண மையங்களும், 2003 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை சுற்றுக்காவல் கண்காணிப்பு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன.  சிறுவர்கள் மனமகிழ் மன்றங்களானது (ஆச்நீஙூ இங்சீஸ)  அதாவது தற்போது மறுபெயரிடப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் மனமகிழ்மன்றங்களும் (ஆச்நீஙூ ஹடூக்ஷ எடுஙுங்ஙூ இங்சீஸ) 2003 ஆம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது.  நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று காவல்துறையினருக்கான சலுகைவிலை அங்காடிகளும்  (இஹடூசிடீடீடூ) காவல்துறை பணியாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் புறநோயாளி மருந்தகங்களும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.   அக்டோபர் 2012 முதல் காவல்துறை பணியாளர்களுக்கென்று உங்களுக்கே சொந்தமான வீடு என்ற திட்டத்தின் கீழ் 36000 வீடுகள் கட்டுவதற்காக திட்டம் துவக்கப்பட்டது.  

அனைத்து வசதிகளுடன் கூடிய வாகனங்கள், படைக்கலங்கள் மற்றும் படைத் தளவாடங்கள் வாங்குவதும் மற்றும் முழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை அதிகரிக்கவும், இடர்க்காப்பீட்டு படிகள், சீருடைப் படிகள் மற்றும் ஏனையப் படிகள் ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்வதே எனக்கு முன்னுரிமை வாய்ந்த பொருளாக உள்ளது.  அதே சிந்தனையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்று உருவாக்க நான் அக்டோபர், 2012 ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டேன்.  

எல்லாவற்றிற்கும் மேலாக, காவல்துறை சுதந்திரமாக தொழில் ரீதியாக செயல்படுவதற்கு எந்தவிதமாகவும் உறவினர்களோ அல்லது சமூக விரோதிகளோ அரசுக்கு வெளியிலிருந்து தலையிடுவதை தவிர்க்க நான் உறுதியளிக்கிறேன்.  மொத்தத்தில் சுருக்கமாக சொன்னால் திடமான திறனுடன் மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முதல் தேவையாகும்.  இங்கு குழுமியிருக்கும் மூத்தக் காவல்துறை அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றங்களை கண்டுபிடிப்பது மற்றும் அவைகளை கட்டுப்படுத்துவது என்பது ஈடு இணையற்ற முடிவுகளை உறுதிச் செய்ய வேண்டும்.

பல காவல்துறை அதிகாரிகள் முதல்நாள் மாநாட்டில் விவாதித்த்போது பல கருத்துக்களை தெரிவித்தனர்.  நிகழ்ச்சி நிரலில் இன்று விவாதத்திற்கு தலைப்புகள் பட்டியலிடப்பட்டது சிந்தனையை தூண்டுவதாகவும் மற்றும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.  இத்தலைப்புகள் மீது நீங்கள் வழங்கிய பயனுள்ள கருத்துகள் காவல்துறையை நல்லமுறையில் செயல்படச் செய்யும்.  தற்போது நிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியாக விவாதிததால் அது நம்மை ஒரு முடிவுக்கு கொண்டுவரும்.  அது பயனுள்ளதாகவும் மற்றும் மனநிறைவளிப்பதாகவும் இருக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்