முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 அ.தி.மு.க-வினர் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - ராமநாதபுரம் மாவட்டக் கழக அவைத் தலைவரும், ராமநாதபுரம் நகரமன்றத் தலைவருமான எஸ்.கே.ஜி.சேகர், கோவை மாநகர் மாவட்டம், காரமடை ஒன்றிய அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என்.முத்துசாமி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி என்.பாஸ்கரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தலூர் ஒன்றியம், தீட்ச சமுத்திரம் ஊராட்சிக் கழகச் செயலாளர் பி.நாகராஜன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் சேகர், முத்துசாமி, பாஸ்கரன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்