முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் டேங்கர் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல், டிச.20 - நாமக்கல்லை மையமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. தென்மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை இந்த தென்மண்டல எல்.பி.ஜி லாரி சங்கத்தில் உள்ளடங்கியது. இச்சங்கத்தின் மூலம் சுமார் 4200 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோல் கார்பரேசன் ஆகிய ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்த அடிப்படையில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிவாயு சிலிண்டகளில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்திய ஆயில் நிறுவனங்கள் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் இருநது பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரும் கிலோ மீட்டர் தூரத்தை குறைவத்து வாடகை வழங்கி வருவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் இருந்து வந்தது. இதனை சீர்படுத்தி தர பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று காலை முதல் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு பணியை எடுக்காமல் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கடந்த இரு திங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதற்கு ஆயில் நிறுவனங்கள் ஒரு நாள் அவகாசம் அளிக்க கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்று மாலை வரை சங்க நிர்வாகிகளுடன் ஆயில் நிறுவன அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் நேற்று சங்க அலுவலகத்தில் சங்கத்தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் கொண்டு குழுவினர் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படாதது அடுத்து இன்று 20 ம் தேதி முதல் 3400 கேஸ் டேங்கர் லாரிகள் பாரத் பெட்ரோலிம் மற்றும் இண்டியன் ஆயில் நிறுவனங்களுக்கு கேஸ் ஏற்றாமல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடவதாக தெரிவித்தனர். 

இது குறித்து சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தெரிவித்ததாவது

கர்நாட மாநிலம் மங்களூரில் இருந்து சேலம் மற்றும் கேரளா மாநிலம் வழித்தடங்களை குறைத்து கார்பரேசன் அதிகாரிகள் கூறுவதாகவும் அதற்கு கடந்த 1.11.2011 முதல் வாடகை பிடித்தம் செய்வதாக கூறியுள்ளனர். 

சங்கத்தின் சார்பாக இணை அளவு செய்ய வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் மேலும் பி.பி.சி.எல் அன் செக்சஸ் புல் டெண்டர்களுக்கு உடனடியாக நிலுவத்தொகை வழங்கப்படாமல் உள்ளனர். அதை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் இன்று 20 ம் தேதி காலை முதல் ஐ.ஓ.சி எல். மற்றும் பிபிஎஸ்சிஎல் வாகனங்களை லோடு ஏற்றாமல் நிறுத்தி வைப்பது எனவும் ஹெச்பிசிஎல் வாகனங்கள் மூலம் ஐ.ஒ.சிஎல் மற்றும் பிபிஎஸ் எல் வாகனங்களுக்கு சிலிண்டர் ஏற்றாமல் நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago