முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரிட்சை

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புனே, டிச. 20 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்க இருக்கிறது.கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையி லான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டி, 2 டி - 20 போட்டி மற்றும் 5  ஒரு நாள் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

இதனால் கேப்டன் தோனிக்கு நெருக்க டி ஏற்பட்டு உள்ளது. எனவே இந்திய அணி டி -20 போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

கேப்டன் குக் தலைமையிலான இங்கி லாந்து அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2- 1 என்ற கணக்கில் வென்று சாதனை புரிந்து உள்ளது. 

டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற வீரர் களில் சிலர் நீக்கப்பட்டு உள்ளனர். அவ ர்களுக்குப் பதிலாக புதிதாக சில வீரர்க ள் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளனர். 

ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா மற்றும் அம்பாதி ராயுடு ஆகி யோர் இன்றைய போட்டியில் களம் இறங்க ஆயத்தமாக உள்ளனர். 

மேற்படி 3 வீரர்களும் டி - 20 போட்டி யில் சிறப்பாக ஆடும் திறன் படைத்த வர்கள். சமீபத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் நன்கு ஆடினர். 

துவக்க வீரரான சேவாக் இந்தத் தொட ரில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரகானே களம் இறங்க இருக்கிறார். 

மேலும், நாக்பூரில் நடந்த கடைசி டெ ஸ்டில் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார். அவருக்கு இந்தத் தொடரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதி ல் அவர் அதிரடியாக ஆடக் கூடியவர். 

கேப்டன் தோனி இந்தப் போட்டியில் தனது கேப்டன்ஷிப் திறமையை நிரூபி க்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago