முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் சிறப்பாக முன்னேற 340 புதிய அறிவிப்புகள்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.20 - தமிழகம் சிறப்பாக முன்னேற 340 புதிய அறிவிப்புகளை நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் வெளியிட்டார். இதன் விபரம் வருமாறு:-

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆண்டுமாநாடு அரசின் நடவடிக்கை குறித்து, ஆண்டு தோறும் நடைபெறும், முக்கியநிகழ்வாகும். இந்த மாநாடுகளில் நான் முழு ஈடுபாட்டுடனும், உண்மையான உணர்வுடனும், நடத்தி வருகிறேன். மாவட்ட ஆட்சியர்களாலும், காவல் துறை உயர் அதிகாரிகளாலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளுக்குகிணங்க நடவடிக்கை எடுக்கபடுகிறது, என்பதை நீங்கள் அறிவீர்கள், நான் அறிந்திருக்கிறேன். 

ஒளிமயமான முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் அறிவு சார்ந்த இந்த நிகழ்ச்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளோம். இங்கு பல்வேறு ஆலோசனைகள் அர்த்தமுள்ளதாக சுமுகமாக வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டின் பரிமாறப்பட்ட கருத்துக்கள் எனக்கு திருப்தி அளிக்கின்றனர். மேலும் நான் சிறப்பாக செயல்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் அவர்கள் தேவைகளை பூர்த்திசெய்து, அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்கள் கெளரமாக வாழ நாம் உதவி வேண்டும். அவையனைத்தும்தான் இந்த மாநாட்டில் சாதனைகள் என்று கருதிகிறேன்.

இந்த மூன்று நாள் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்துக்களை அடுத்து கீழ்கட்ட அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியில், 4 ஆயிரம் இடங்களில்  ரிசார்ச் ஸாப்டுகள் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் மூத்துப்பேட்டை சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கூடங்களிலும் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் தமிழ்நாடு மற்றும் இந்திய வரைபடங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தமிழகம் முழுவதும் இந்த செயல்முறை விரிவுபடுத்தப்படும்.

விலையில்லா கறவைமாடுகள் கண்காணிப்பது குறித்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் ஒரு நாள் பயிற்சி, 3 நாளாக அதிகரிக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் கல்லறையன் குன்றில், பொது விநியோக திட்டத்திற்கு மேலும் இரண்டு நடமாடும் வேன்கள் அளிக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு டி.இ.ஓ. பதவி அனுமதிக்கப்படும். நாகபட்டிணம் மாவட்டம் அரிச்சந்திரன் நதியில் வரும் தண்ணீரை  ஆயிரம் ஏக்கரில் சேமிக்கப்பட்டு. குடிநீர் ஆதாரம் மேம்படுத்தப்படும்.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 7 பள்ளிகள் கட்ட மேலும் நிதி அனுமதிக்கப்படும். 2012 டிசம்பரில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இவர்கள் மேலும் 3 மாதத்திற்கு பணி நீட்டிக்கபடுவார்கள். திருச்சி மாவட்டத்தில் பஞ்சமலை குன்றில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படும். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவையை பூர்த்தி செய்ய பெரம்பலூரில் ஒரு பால் பண்னை அமைக்கப்படும்.

பெரம்பலூரில் தனியாக ஒரு நெடுஞ்சாலை பிரிவு அமைக்கப்படும். இந்த மாவட்டங்களில் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ரூ.2 கோடியிலிருந்து 5 கோடியாக அதிகரிக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிசை பகுதியில் வாழும் 6730 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரபடும். விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்படும்.  வேலூர் மாவட்டத்தில் விநியோக அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 

திருவண்ணாமலையில் கிரிவலம் மற்றும் திருவிழாக்கள் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும். திருவண்ணாமலையில் ஒரு பால் கூட்டுறவு ஒன்றியமும், தனி நெடுஞ்சாலை பிரிவு அமைக்கப்படும். பள்ளிக்குழந்தைகள் சீருடை ஒரே மாதிரியாக்கப்படும். 

எச்.ஐ.வி., டி.பி., கேன்சர் ஆகிய நோய்களுக்கான செலவுகள் உழவர் பாதுகாப்பு மையத்தில் கீழ் வழங்கப்படும். இது டயலிஸிஸ் சிகிச்சைக்கு விரிவுபடுத்தப்படும்.

ஈடுரோடு மாவட்டத்தில் காங்கேயம்யத்தில் தாலுக்கா அலுவலகம் அமைக்கப்படும். வைகை ஆற்றில் மஞ்சள் பட்டிணத்தில் ஒரு மேம்பாலம் கட்டப்படும். சிவகங்கை மாவட்ட திருப்புவனம் துணை மின் நிலையம் மேம்படுத்தப்படும்.  ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனையாக  தரம் உயர்த்தப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் விரிவுபடுத்தப்படும்.

ராமேஸ்வரத்தில் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகையாற்றில் 4 தடுப்பணைகள் கட்டப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 துறைகளுக்காக மெகா திட்டவளாகம் கட்டப்படும். விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் ரயில்வே மேம்பாலம் சிவகாசியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டம் சித்தேரியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தனி விடுதிகள் கட்டப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோழிமேடு மற்றும் உத்திரமேரூரில் மேம்பாலங்கள் கட்டப்படும். தெரு விளக்குகள் அமைக்கப்படும். 56 சாலைகள் சீரமைப்பும் செய்யப்படும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் ஏ.ஆர். காம்பளஸ்சும் மேட்டுபாளையத்தில் காவலர்கள் ஒய்வு அறையும் கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் சாலைகள் சீரமைக்கப்படும். கோவில்பட்டியில் சிந்தடிக் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டமும், பேருந்து நிலையமும் அமைக்கப்படும். அரியலூர் மருத்துவமனை மேம்படுத்தப்படும். அருங்காட்சியம் அமைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பால் துணை பதிவாளர் பணி இடம் ஏற்படுத்தப்படும். நடமாடும் பொது விநியோகத்திட்ட பிரிவும் அமைக்கப்படும்.

காவேரி நதியில் ரூ.68.55 கோடியில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். கிணத்துகடவில் குடிநீர் விநியோகத்திற்கு ஜெனரேட்டர் அமைக்கப்படும். நெல்லித்துறை சாலை சீரமைப்பு செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இரு பதவிகள் அனுமதிக்கப்படும்.

கோவில்பட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். கோயம்புத்தூரில் 2 ஆயுதபடை பிரிவுகள் ஏற்படுத்தப்படும். பிள்ளயார்பட்டி, ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடியில் சுழலும் கேமராக்கள் அமைக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் காவல் துறையினருக்காக பொது கூடம், கேன்டின் வசதி, எஸ்.பி. முகாம் அலுவலகம் அமைக்கப்படும்.

அந்த மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு படையில் 97 காலி இடங்கள் நிரப்பப்படும். தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் நடமாடும் கிராமங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.7 கோடி 20 கோடியாக அதிகரிக்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டையும், சிப்கோ தொழில்பேட்டையும் அமைக்கப்படும். தருமபுரி கலவரத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கொடைக்கானலில் சாலைகள் அகலபடுத்தப்பட்டு பெரிய சுற்றுலா திட்டம் நிறுவப்படும். பழனி கோயிலில் மேலும் ஒரு ரோப் கார் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏ.ஆர். போலீசுக்கு நிர்வாக அலுவலகமும், சமுக கூடங்களும் நிறுவப்படும். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் ஆண், பெண் கல்லூரிகள் அமைக்கப்படும்.  திருச்சி மாவட்டத்தில் முசிறி, துறையூர், ஜியர்பூரம், லால்குடி ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் நிலையங்களும்,  ஜியர்பூரத்தில் மகளிர் காவல் நிலையமும் அமைக்கப்படும். 10 காவல் நிலையங்கள் மேம்படுத்தப்படும். 3 கூடுதல் ஏ.ஆர். பிரிவுகள் அமைக்கப்படும். ஏ.ஆர். போலீசுக்கு  புதிய  85  குடியிருப்புகள் கட்டப்படும். 3 துணை கண்காணிப்பாளர்களுக்கும் 5 உதவி கண்காணிப்பாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும்.

மதுரை, சென்னை உயர்நீதிமன்றம் அருகே போலீஸ் அதிகாரிகளுக்கு விடுதிகள் கட்டப்படும்.

மதுரை நகர போலீஸ் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

மதுரை காளவாசல் சந்திப்பு கோரிபாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும். அங்கு காவல்துறை அதிகாரிகளுக்கு காணொலி காட்சி வசதிகள் செய்து தரப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளுக்கு ரத்த பரிசோதனை கருவிகளும், மணிமங்கலம், செம்மங்கலம் ஓட்டேரி காவல் நிலையங்களில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.  3 ஏர்ஆர் பிரிவுகள் அமைக்கப்படும். 12 காவல் நிலையங்கள் மிகப்பெரிய காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

மயிலாடுதுறையில் 2 மதுவிலக்கு தடுப்பு சாவடிகள் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் 2 கூடுதல் ஏர்ஆர் படைப்பிரிவுகள் அமைக்கப்படும். 37 சோதனை சாவடிகளில் தனிபோலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மதுரையில் மேலும் ஒரு ஆயுதப்படை பிரிவு அமைக்கப்படும்.

உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் மேலூர் ஆகிய இடங்களில் 100 வாக்கி டாக்கி கருவிகள் வழங்கப்படும். தாசில்தார்களுக்கும், ஆர்டிஓ.களுக்கும் வயர்லஸ் கருவிகள் வழங்கப்படும். மேலூர் ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல்நிலையங்கள் அமைக்கப்படும். 

நாடகம் மற்றும் கூத்துக்கள் மூலம் கல்வி மற்றும் காவல்துறையினர் இணைந்து சாதி அற்ற சமுதாயம் அமைக்க பிரச்சாரம் செய்வார்கள். மதுரையில் ஏர்ஆர் பிரிவுக்கு டி.எஸ்.பி. குடியிருப்பும், நிர்வாக அலுவலகமும் அமைக்கப்படும். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி ஆகிய இடங்களில் 2 கலைக் கல்லூரிகள் நிறுவப்படும். ஆலங்குடி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் 2 போக்குவரத்து காவல் நிலையங்களும், 2 ஏர்ஆர் படை பிரிவுகளும் அமைக்கப்படும். 

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடியில் 5 மேம்பாலங்களும், 5 சாலை சந்திப்புக்களும் அமைக்கப்படும். மேச்சேரி, நஞ்சேரி ஒன்றியங்களில் குடிநீர் வசதி செய்யப்படும். பாதுகாப்பிற்கு செல்லும், போலீசுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படும். மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சில்லரை செலவிற்கான நிதி ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். சேலம் நகரையொட்டிய கொண்டாலம்பட்டி, உருக்கு தொழிற்சாலை வீராணம் காவல் நிலையங்கள் மற்றும் 15 கிராம காவல் நிலையங்கள் சேலம் நகரத்துடன் இணைக்கப்படும். அம்மாவட்டத்தில் 56 சுழலும் கேமராக்கள் நிறுவப்படும். டி.ஐ.ஜி.க்கு அலுவலகம் அமைத்துத்து தரப்படும். 

சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறப்பு சமூக பொருளாதார நிதி வழங்கப்படும். சிவகங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்படும். ஏஆர் படை பிரிவுக்கு நிர்வாக அலுவலகமும், 2 ஏர்ஆர் படை பிரிவுகளும் அமைக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் 42 கிலோமீட்டார் சாலைகள் சீர் செய்யப்படும். 274 சிற்றூர்களில் குழாய்கள் அமைக்கப்படும். மேலராமநல்லூரில் தரைப்பாலம் அமைக்கப்படும். ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து காவல் நிலையங்களும் அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவும், ரயில்வே மேம்பாலமும், போலீஸ் அதிகாரிகளுக்கு சமூக கூடங்களும் அமைக்கப்படும்.

பெரம்பலூரில் ஜவுளி பூங்கா, வேப்பூரில் மகளிர் கலைக்கல்லூரி நிறுவப்படும். மங்கலம்மேட்டில் ஒரு துணை பிரிவு அமைக்கப்படும். இரண்டு நெடுஞ்சாலை கண்காணிப்பு வாகனங்கள் வழங்கப்படும். தேனி மருத்துவ கல்லூரிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியும், கேரள எல்லையோர தமிழ் குழந்தைகளுக்கு விடுதிகளில் இடமும் வழங்கப்படும்.

கண்ணகி கோயில் அருகே பாதுகாப்பு காவலர்களுக்காக சமூக கூடம் அமைக்கப்படும். அம்மாவட்டத்தில் 2 ஏஆர் பிரிவுகளும் நிறுவப்படும். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனி போக்குவரத்து பிரிவும் ராஜபாளையத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவும், ஒரு ஏஆர் படை பிரிவும் அமைக்கப்படும். 

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை நிறுவப்படும். புதுப்பட்டி மற்றும் கொம்பம்பட்டியில் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.தேவகோட்டை, இளையாங்குடி, மானாம்மதுரை மற்றும் சிங்கம்புனரியில் போக்குவரத்து காவல் நிலையங்களும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் போக்குவரத்து வசதியும், சிடி ஸ்கேன் வசதியும், பாலக்கரை மேம்பாலமும் 2 கூடுதல் ஏஆர் பிரிவுகளும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணப்பகுதியில் 2 நவீன கட்டுப்பாட்டு அறைகளும், 100 சுழலும் கேமராக்களும் அமைக்கப்படும். 

200 குடியிருப்புகள் ஏஆர் பிரிவுகளுக்காகவும், ஒரத்தநாடு மற்றும் திருவிடை மருதூரில் டி.எஸ்.பி. அலுவலகமும் அமைக்கப்படும். 5 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். தூத்துக்குடியில் 458 ஏஆர் பிரிவுகளுக்காக குடியிருப்புகள் கட்டப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 2 நெடுஞ்சாலை ரோந்து படைகளும், முத்துப்பேட்டையில் ஒரு விருந்தினர் மாளிகையும் அமைக்கப்படும். வேலூரில் 2 ஏஆர் படை பிரிவுகள் அமைக்கப்படும். அரக்கோணத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படும். 162 ஏஆர் போலீசுக்காக குடியிருப்புகள் கட்டப்படும். விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் ஒரு விபத்து சிகிச்சைப்பிரிவும், சங்கராபுரத்தில் ஒரு சிட்கோ தொழில்பேட்டையும், ஆரவல்லி காவல் நிலையம் தரம் உயர்த்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் திருடர்களுக்கு எச்சரிக்கையும், சுழலும் கேமராக்களும் அமைக்கப்படும். விழுப்புரத்தில் 2 ஏஆர் படை பிரிவுகளும், ஒரு ஊர்காவல் படை அலுவலகமும் 5 இடங்களில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களும் அமைக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கடல் ரோந்து படகுகள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஏஆர் பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்.

சென்னையில் ஏஆர் படை பிரிவுகளுக்கு நிர்வாக கட்டிடமும், வி.ஐ.பி. பாதுகாப்பிற்கு 35 அம்பாசிடர் கார்களும் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஏஆர் படை பிரிவுகள் அமைக்கப்படும். சோழவரம், வெள்ளவேடு, மீஞ்சூர், வெங்கல், செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். திருத்தணி நகர காவல்துறையில் 50 அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 சோதனை சாவடியும், போக்குவரத்து சோதனை சாவடியும் அமைக்கப்படும். மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு குடியிருப்புகள் நிறுவப்படும். மாவட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ஊட்டி காவல் நிலையத்தில் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

திருவண்ணாமலையில் 14 கிரிவலம் பாதை அகலப்படுத்தப்படும். இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்காக மயானங்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும். 2 ஏஆர் பிரிவுகள் அமைக்கப்படும். டிபிஓ, ஏஆர் மற்றும் எஸ்.பி.களுக்காக குடியிருப்புகள் கட்டப்படும். சென்னையில் 250 ஏஆர் அதிகாரிகளுக்காக நிரந்தர குடியிருப்புகள் கட்டப்படும். 

சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையமும், மருத்துவமனையும் தரம் உயர்த்தப்படும். சென்னை நகர காவல் துறை கேண்டின் தரம் உயர்த்தப்படும். துணை கமிஷனர்களுக்காக திருச்சியில் 2 குடியிருப்புகள் கட்டப்படும். குற்றப்பிரிவுக்கு 2 ஆய்வாளர் பதவிகள் அனுமதிக்கப்படும். 

மாநில இயற்கை இடர் மீட்பு படைக்கு கருவிகள் வாங்க ரூ.108 லட்சம் வழங்கப்படும். காவல்துறை போட்டிகளில் வெற்றி பெருபவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விளையாட்டு சாமான்கள் வாங்க ரூபாய் 1.75 கோடிகள் நிதி வழங்கப்படும். எல்லா மாவட்டங்களிலும், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உதவ ஒரு சட்ட அலுவலர் நியமிக்கப்படுவார்கள். தூத்துக்குடியில் மாவட்ட சிறையும், செங்கல்பட்டில் ஒரு துணை சிறையும் அமைக்கப்படும். மதுரை மற்றும் கடலூர் மத்திய சிறைகளுக்கு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை வழங்கப்படும். புழல் சிறையில் ரூ.3 கோடியில் ஒரு முன்னோடி சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்படும். புழல், வேலூர், கடலூர் மற்றும் சேலம் மத்திய சிறைகளில் தலா ரூபாய் 25 லட்சத்தில் ஸ்கேனர் கருவிகள் வழங்கப்படும். தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு சுழல்நிதியாக ரூ.30 லட்சம் வழங்கப்படும்.

காவலர் தேர்வு பள்ளிகளுக்கு 8900 நாற்காலிகள் வழங்கப்படும். அங்கு பாதிரங்கள் வாங்க ரூ.10.14 லட்சம் வழங்கப்படும். சத்தியமங்கலம் சிறப்பு படை பிரிவிற்கு கட்டிங்கள் கட்ட ரூ.9 கோடி வழங்கப்படும். அவர்களுக்கு ஆபத்து படி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மருதம் வளாகத்தில் சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு அலுவலகத்திற்கு கூடுதல் தளம் கட்ட ரூ.81.8 லட்சம் வழங்கப்படுகிறது. 10 வெடிகுண்டு மோப்ப நாய்கள் நியமிக்க ரூ.42 லட்சம் கூடுதலாக வழங்கப்படும். சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மேலும் ஒரு சட்ட ஆலோசகர் வழங்கப்படுவர். 

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு கூடுதலாக 4 சிறப்பு அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த பிரிவில் 11 டி.எஸ்.பி.கள் நியமிக்கப்படுவார்கள். 2013 ஜனவரியில் பள்ளி மாணவர்களுக்கு பைகள் விநியோகிப்படுகின்றன. மாவட்ட ஆட்சியாளர் தரத்தை நிர்ணயிக்கவேண்டும். 

உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்காக மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ``கிர்ஜி கர்மான் விருது'' 2011-12-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பதை நான் பெருமையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்