முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.21 -​வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி நடை முறை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், வாராக் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஸ்டிரைக் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தத்தில் 5 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரம்  ஊழியர்கள் பங்கேற்றனர். ஸ்டேட் பாங்கி தவிர ஏனைய அனைத்து பொதுத்துறை வங்கிகளும்,  பழைய தனியார் வங்கிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.

சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டும் திறந்து இருந்தன. ஆனால் ஊழியர்கள்   பணிக்கு செல்லாததால் அதிகாரிகள் மட்டும் இருந்தனர். இதனால் வங்கிகள் செயல்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வங்கி சேவை முற்றிலும் பாதித்தது. பணம் எடுத்தல், டெபா சிட் செய்தல், காசோலை பரிமாற்றம், டி.டி. எடுப்பது, பணப் பரிமாற்றம் போன்றவை முடங்கின. இதனால் வர்த்தக தொழில் நிறுவன செயல்பாடுகளும் முடங்கின.

இன்று ஒரு நாள் மட்டும் பல கோடி மதிப்பிலான வங்கி சேவை பாதித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ.,  ஐ.டி.பி.ஐ., எச்.டி.எப்.சி. உள்ளிட்ட சில தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டன. வங்கிகள் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களை நாடினார்கள். அவசர பணத் தேவையை nullர்த்தி செய்ய ஏ.டி.எம். சென்டரில் குவிந்தனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் nullண்ட வரிசை காணப்பட்டது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஊழியர்கள் சென்னை மெமோரியல் ஹால் அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூட்டமைப்பின் நிர்வாகி அருணாசலம் தலைமையில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஆண்​பெண் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்