முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 21 - 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களை சேர்ந்த கியாஸ் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் கியாஸ், சிலிண்டருக்கு தட்டுபாடு ஏற்படலாம் என கருதப்படகிறது.​

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய மூன்று எண்ணை நிறுவனங்களும் சமையல் கியாஸ் வினியோகம் செய்து வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாசை நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு 4000 டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. அதனால் புதிய வாடகை நிர்ணயிக்கும்படி டேங்கர் லாரி உரிமையாளர்கள் எண்ணை நிறுவனங்களை வலியுறுத்தி வந்தார்கள். இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 

புதிய வாடகை நிர்ணயம் செய்தல், நிலுவை வாடகை தொகையை கொடுக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை டேங்கர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களது கோரிக்கைகளை எண்ணை நிறுவனங்கள் ஏற்காததால் கியாஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் ஐ.ஓ.சி.க்கு சொந்தமாக 22 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து கியாசை டேங்கர் லாரிகளில் ஏற்றிச் செல்லும் பணி முற்றிலும் பாதித்தது. டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. கியாஸ் நிரப்பக்கூடிய இடங்களுக்கு டேங்கர் லாரிகள் கியாசை கொண்டு செல்லாததால் நிரப்பும் பணி பாதித்தது.

சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பினால்தான் வினியோகஸ்தர்களுக்கு அனுப்ப முடியும். எனவே டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஓரிரு நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் நிலைமை மோசமாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் எண்ணை நிறுவன அதிகாரிகள் லாரி உரிமையாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். 

வேலை நிறுத்தம் குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-​

குறைக்கப்பட்ட தொலைவின் அடிப்படையிலேயே புதிய வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 2011-​ம் ஆண்டு நவம்பர் 1-​ந் தேதி முதல் வாடகை தொகை நிர்ணயிக்கப்பட உள்ளதால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். மேலும் ஓராண்டுக்கு மேலாக கோடிக்கணக்கான ரூபாய் வாடகை வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். இதனால் கியாஸ் டேங்கர் லாரிகளை இயக்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஓ.சி., பி.பி.சி ஆகிய நிறுவனங்களுக்காக இயக்கப்படும் சுமார் 3350 கியாஸ் டேங்கர் லாரிகளையும் நேற்று காலை முதல் காலவரையின்றி நிறுத்தி உள்ளோம்.

இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து அந்த இரு எண்ணை நிறுவனங்களுக்கும் எச்.பி.சி.நிறுவனம் கியாஸ் லோடு ஏற்றினால் அந்த நிறுவனத்துக்கு இயக்கப்படும் 850 டேங்கர் லாரிகளும் நிறுத்தப்படும். பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனால் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis