முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதி மத பேதம் இல்லாத இடம் சினிமா: அமிதாப்பச்சன்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.22 -​ஜிாதி, மதம், பேதம் இல்லாத இடம் சினிமா என்று இந்தி பட முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் கூறினார். 

இதன் விபரம் வருமாறு:- பத்தாம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா கடந்த 13 -ம் தேதி தொடங்கி 20 -ம் தேதி வரை ஏழு நாட்கள் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் 45 நாடுகளை சேர்ந்த 160 திரைப்படங்கள் 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இவ்விழாவின் கடைசி நாளான 20 -ம் தேதி நிறைவு விழா சென்னை உட்லன்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். 

பின்னர் தமிழில் சிறந்த படங்களாக அரவான், ஆரோகணம், அட்டக்கத்தி, மெரினா, மெளனகுரு, முப்பொழுதும் உன் கற்பனைகள், நான் ஈ, நீர்ப்பறவை, பீட்சா, சுந்தரப்பாண்டியன், சாட்டை, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் போட்டி தேர்வில் கலந்து கொண்டன. இத்தேர்வின் நடுவர்களாக நடிகர் சிவக்குமார், இயக்குனர் சற்குணம், பி.ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த போட்டியில் வழக்கு எண்18/9 முதல் பரிசு பெற்றது. இரண்டாம் பரிசு சாட்டை படம் பெற்றது. பீட்சா, மெளனகுரு திரைப்படங்கள் பெஷல் சூரி விருது பெற்றது.

அதே போல செய்தி குறும்படங்கள் வேல்டு சினிமா பர்மா பஜார்தான் மானிடா கேளடா, வண்ணாந்துரை, ஆகிய குறும் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை அமிதாப்பச்சன் இந்து ராம் வழங்கினார்கள். விழாவில் தமிழ் திரை உலகை சார்ந்த இயக்குனர், தயாரிப்பாளர்கள். நடிகர், நடிகைகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டை தங்கராஜ், சுகாசினி, கண்ணன் மற்றும் நடிகைகள் ரேவதி, ரோகினி, நளினி, பாத்திமா பாபு, என பலர் கவனித்தனர். (நிகழ்ச்சியை பார்த்திபன், காம்பியர்) ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

பின்னர் அமிதாப்பச்சன் கூறியதாவது:-

இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களை பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முனைப்பு காட்டியிருக்கிறார்கள். ஐம்பது சதவிகித பங்கு அவர்களுக்கு இருக்கிறது. சமீபத்தில் பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதை கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியிலிருந்து சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன். உலக அளவில் இந்தியாவில் தான் அதிக படங்கள்  சிறந்த படங்களாக இருக்கிறது. குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும்.

சினிமாவில் தான் ஜாதி, மதம், பேதம் பார்ப்பதில்லை. இந்த துறையில் அதற்கான இடமும் இல்லை. ஒருகாலத்தில் சினிமா என்றால் தாழ்வாக பார்ப்பார்கள். பெரிய இடத்து பிள்ளைகளை சினிமாவிற்கு விடமாட்டார்கள். சின்ன வயதில் என் பெற்றோர்கள் படம் பார்த்து அந்த படம் நல்ல படமாக இருந்தால் தான் எங்களை படம் பார்க்க அனுப்புவார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. நம் வாழ்க்கையில் சினிமா தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. தமிழ் சினிமா இல்லாமல் நாங்கள் இல்லை. வட இந்திய சினிமாவை விட தமிழ் படங்களில் ஒழுக்கம், உண்மை, கடின உழைப்பு, நேரம் தவறாமை கட்டுப்பாடு இப்படி அனைத்து அம்சங்களும் தமிழ் சினிமாவில் இருக்க இதை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பட விழாக்களை சிறப்பாக நடத்துங்கள், முடிந்தால் நானும் உங்களோடு பணியாற்றுகிறேன். இந்த நேரத்தில் விழா ஏற்பாடு செய்திருக்கும் அமைப்பிற்கு என்னால் முடிந்த அளவுக்கு ரூ.11 லட்சம் நன்கொடையாக அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!