முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.22 - தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்ஸ் போலியோ சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாலும், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்ததாலும், மார்ச் 2004-க்கு பிறகு போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இவ்வாறு அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதன் காரணமாக அக்குழந்தைகள் போலியோ போன்ற கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகுவதோடு, நோய் பரவவும் ஏதுவாகிறார்கள்.

இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக  இன்று (22.12.​2012 சனிகிழமை) போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்காக கூடுதலாக போலியோ சொட்டு மருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செயல்படுத்துவதற்காக கீழ்கண்ட பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள் கணக்கெடுப்பும் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம், மேம்பாலம், தொழிற்சாலை, நெடுஞ்சாலை, இரயில்வே பணிகள்.

செங்கற்சூளை,  நரிக்குறவர் தங்குமிடம், வேளாண் தொழிலாளர் வசிப்பிடம், மீன்பிடித் தொழிலுக்காக இடம் பெயர்ந்து வாழும் மீனவ பகுதி, சாலையோர குடியிருப்புகள், வாத்து மற்றும் ஆடு மேய்ப்பவர், இலங்கை அகதிகள்.

இந்த போலியோ சிறப்பு முகாம்களில் ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் ஈடுபடுகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் சுமார் 5400 பகுதிகளில்  இன்று (22.12.12) சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாம் வாயிலாக ஏறக்குறைய 35,000 ( இடம் பெயர்ந்து வாழ்வோரின்) குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago