முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி கோர்ட்டில் ரித்தீஷ் எம்.பி. ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

பரமக்குடி,டிச.23 - பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் பரமக்குடி கோர்ட்டில் ரித்தீஷ் எம்.பி. ஆஜர் ஆனார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் குருபூஜை விழாவின் போது ரித்தீஷ் எம்.பி. தரப்பினருக்கும் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆனந்த் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ரித்தீஷ் எம்.பி. உள்பட 36 பேர் மீது அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கமுதி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கின் மேல்விசாரணை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி பரமக்குடி கோர்ட்டில் நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் நடந்தது. அப்போது ரித்தீஷ் எம்.பி. கோர்ட்டில் ஆஜராக வில்லை. இதனால் ரித்தீஷ் எம்.பி.க்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் ரித்தீஷ் எம்.பி. கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சீனிவாசன் மீண்டும் 23.1.2013 அன்று கோர்ட்டில் ஆஜராகும்படி ரித்தீசுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!