முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கார் விருது மீது ஆசை இல்லை: ஏ.ஆர்.ரகுமான்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.23 - ஆஸ்கார் விருதுக்கு ஆசை இல்லை என்றும், இரண்டு விருதுகள் போதும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு:- இம்மாதம் 29-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜெயா டிவி ஒளிபரப்பாக உள்ளன. 

இதுபற்றி நிருபர்களிடம் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:- 

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தொலைக்காட்சிக்காக இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். இதில் நான் இசையமைத்த முதல் படம் முதல் தற்போது இசையமைத்திருக்கும் கடல் படம் வரை பாடல்களை தொகுப்பாக இந்த நிகழ்ச்சி  இருக்கும். சுமார் 30 பாடல்கள் இடம் பெறுகிறது. நான் மட்டும் 5 பாடல்கள் பாடுகிறேன். இந்த நிகழ்ச்சி நடத்த இன்னொரு முக்கிய காரணம், இதற்கு முன்பு நடத்திய நிகழ்ச்சிகளில் பிற மொழி பாடல்களும் இருக்கும். இந்நிகழ்ச்சியில் தமிழ்பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும்  என்பது என்னோட நீண்ட- நாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஹரிகரன், கார்த்திக் , எஸ்.பி.பி., என்.சிஸ்டர்,(ரேஹைனா) சின்மயி, இப்படி ஏராளமானவர்கள் பாடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெளி நாட்டிலிருந்து ஏராளமான இசை வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆஸ்கார் விருது பற்றி கேட்கிறீர்கள். ஆஸ்கார்ருக்கு ஆசை இல்லை. இரண்டு விருதுகள் வாங்கியது போதும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஜெயா டி.வி. கே.பி.சுனில், ராஜன், தீபக்கட்டாணி என பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!