முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மா., திறனாளிகளை நேயத்துடன் பார்க்கின்ற அரசு அ.தி.மு.க. தான்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ந்தமல்லி, டிச.24 -  உலக மாற்று திறனாளர்கள் தினவிழாவை முன்னிட்டு பரங்கிமலை பட்ரோடு கன்டோன்மன்ட் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உதவிகரம் மாற்றுதிறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்று திறனாளிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்று திறனாளிகளுக்கு கேடயம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் மாற்றுதிறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

அப்போது அவர் பேசியவதாவது:-

 தமிழகத்தில் மாற்று திறனாளிகளை மனித நேயத்துடன் பார்க்கும் அரசு அ.இ.அ.தி.மு.க.அரசு தான் என்றும், முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை 500 லிருந்து 1000 உயர்த்தியபோது அதனை மாற்று திறனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு அரசு வேலைகள் எளிதில் கிடைத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா  உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து துறைகளில் காலியாக உள்ள இடங்களில் கட்டாயம் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து மாற்று திறனாளிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது போன்று இன்னும் ஏராளமான பல நல்ல திட்டங்களை மாற்று திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் வழங்குவார் என்று பேசினார். 

இதில் சிறந்த மாற்றுதிறன் சாதனையாளர் விருது சேலம்.கு.சண்முகம், சிறந்த பாடகர்விருது கானா.விஜி, இளம் வீளையாட்டு வீராங்கனைவிருது எ.இந்து, தன்னம்பிக்கையாளர் விருது புதுக்கோட்டை இராஜேந்திரன், சிறந்த மாணவர் விருது இராஜாராமன், சிறந்த சமூக சேவகர் விருது விஸ்டம் அரிமாசங்க தலைவர் மாம்பலம்.எம்.முருகன், வளரும்அறிவியல் இதழ்ஆசிரியர் இ.கே.தி.சிவகுமார், யூனிவர்சல்அறக்கட்டளை தலைவர் டாக்டர்.அஜய்வசந்த், மாற்றுதிறனாளர் மற்றும் பெண்கள் நலன்துறை சமூகபணியாளர் கே.ஞானசவுந்தரி, தமிழ்நாடு பொதுநல சங்க பொதுசெயலாளர் வி.எல்.நாதன், ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எக்ஸ்நோரா இன்டர்நேஷ்னல் நிறுவனர் எம்.பி.நிர்மல், ஜெயா கல்வி குழும தலைவர் பேராசிரியர் கனகராஜ், எம்.ஜி.ஆர்.காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் லதா ராஜேந்திரன், பெப்சிகோ நிறுவனத்தின் அதிகாரி சமீர்அனுப் மிஞ்ச், தமிழ்நாடு உதவிகரம் மாற்றுதிறனாளர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் டி.எ.பி.வரதகுட்டி, பொதுசெயலாளர் ஆவின்.கி.கோபிநாத், மாநில பொருளாளர் எம்.பி.நந்தகுமார், உதவிகரம் நல்வாழ்வு சங்க மாநிலதுணை பொதுசெயலாளர் டி.வைரமணி, எ.கே.அருணாசலம், பி.அத்தியண்ணா, உட்பட ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்