முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 24 - கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டு ல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறி வித்தார். 

நவீன கிரிக்கெட்டின் மாவீரனாக கருத ப்படுபவர் டெண்டுல்கர். கடந்த 20 ஆண்டுகாலமாக விளையாடி வந்த அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாத னைகளை புரிந்து இருக்கிறார். இந்த சாதனைகள் மற்ற வீரர்களால் நீண்ட காலத்திற்கு நெருங்க முடியாத அள விற்கு உள்ளது. 

சர் டொனால்டு பிராட்மேனை நினைவு படுத்தியது டெண்டுல்கரது பேட்டி ங். ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த டெண்டுல் கர் நேற்று ஓய்வு  பெற்றார். இருந்த போதிலும், அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார். 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை டெண்டுல்கரின் நீண்ட கால பயண ம் முடிவுக்கு வந்துள்ளது. 39 வயதான வலது கை பேட்ஸ்மேனான அவர் இதி ல் பிரமாண்ட அளவில் ரன்னைக் குவி த்திருக்கிறார். 463 ஒரு நாள் போட்டியி ல் ஆடியுள்ள அவர் மொத்தம் 18,426 ரன்னைக் குவித்து இருக்கிறார். இதன் சராசரி 44.83 ஆகும். 

உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மும்பை வீரரான அவரை லிட்டில் மாஸ்டர் என்றும் , மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அன்போடு அழை க்கிறார்கள். அவர் கடந்த சில மாதங்களாக மோசமாக ஆடி வந்தார். 

ஆனால் டெண்டுல்கரின் பேட்டிங் திற ன் குறித்து இரண்டு வித கருத்து இருக்க முடியாது. அவர் மொத்தம் 100 சர்வ தேச சதங்களை அடித்து இருக்கிறார். இதில் 51 டெஸ்டிலும், 49 ஒரு நாள் போட்டியிலும் அடங்கும். 

சில கால கட்டத்தில் அவர் மோசமாக ஆடி இருந்த போதிலும், பிராரட்மேனு க்குப் பிறகு விளையாடிய வீரர்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கர் தான் என்பது நினைவு கூறத்தக்கது. 

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக செயல்பட்ட டெண்டுல்கரால் அதிக பொறுப்பின் காரண மாக கேப்டனாக வெற்றிகரமாக வலம் வர முடியவில்லை. 

ஒரு கால கட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டெண்டுல்கரை வீழ்த்துவது எதிரணியினரால் முக்கிய மாக கருதப்பட்டது. அதன் பிறகு செள ரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறப்பாக ஆடி சச்சினின் நெருக்கடியை குறைத்தனர். 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் டெஸ்டில் அறிமுகம் ஆன போது, அவ ருக்கு வயது 16 தான். அப்போது பாக். அணியில் வாசிம் அக்ரம் மற்றும் வக் கார் யூனிஸ் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் தங்களது பயங்கர பந்து களின் மூலம் பேட்ஸ்மேன்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர். 

அப்போது நடந்த ஒரு போட்டியின் போது டெண்டுல்கரை வேகப் பந்து ஒன்று பதம் பார்த்தது. அவர் ரத்தம் சொட்டிய சட்டையுடன் தொடர்ந்து நங் கூரம் போல நிலைத்து ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது மறக் க முடியாத நிகழ்ச்சி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்