முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுச் சங்க உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு

புதன்கிழமை, 26 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.டிச.26  - கூட்டுறவுச் சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு டிச.28 முதல் ஜன.3 வரை நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வை சுமார் 2.4 லட்சம்  பேர் எழுதினர். இதனை அடுத்து தேர்வு முடிவு மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களின் நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதத்தை சிடூஷச்ச்ஙீஙூஙுஸ.ச்ஙுகி என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவுஇறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து கூட்டுறவு பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் டிச.28 முதல் ஜன.3 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிய தேதி மற்றும் நேரத்தில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு சொந்த செலவிலேயே வரவேண்டும்.

 எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சுய குறிப்பினையும் (பயோ டேட்டா), நேர்காணலின்போது சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் விபரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக, உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் குறித்த விபரங்கள் சிடூஷச்ச்ஙீஙூஙுஸ.ச்ஙுகி  என்ற இணைதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்ப மாவட்டம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்களை உரிய  படிவத்தில் இணைய தளத்திலேயே பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்த விபரங்களின் இருநகல்களில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, நேர்காணலுக்கு வரும் போது எடுத்து வர வேண்டும். இதுகுறித்து கூடுதல் விபரங்களை பெறுவதற்கு 044​24801034, 24801036 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாக கொண்டு பட்டப்படிப்பினை முடித்திருந்தால், அதற்குரிய சான்றிதழுடன் வரவேண்டும்.

சான்றிதழ் இல்லாதபட்சத்தில் தமிழ்மொழியினை பயிற்று மொழியாகக் கொண்டு தகுதிக் கல்வி முடித்தமைக்கான முன்னுரிமை வழங்க இயலாது. வயது, சாதி, கல்வித்தகுதிகள் தொடர்பான அனைத்து சான்றிதழ்களின் மூலம் மற்றும் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று நேர்காணலுக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்