முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் பிரார்த்தனை

புதன்கிழமை, 26 டிசம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி  சென்னையில் நடந்த சிறப்பு திருப்பலிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகமெங்கும் வசிக்கும் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சென்னையில் சிறப்பாக நடைபெற்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. சாந்தோம் தேவாலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலி மயிலை பேராயர் சின்னப்பா தலைமை வகித்தார். திருப்பலியில் தேவகுமாரன் பிறப்பு குறித்து பேராயர் அறிவித்தபோது கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி பெருக்குடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். புத்தாடை அணிந்து திருப்பலியில் பங்கேற்ற ஒவ்

வொருவரும் மற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சென்னை சாந்தோம் ராயப்பேட்டை சி.எஸ்.ஐ சர்ச் ,எழும்nullர் சி.எஸ்.ஐ சர்ச் ,செயின் தாமஸ் மவுண்ட் சர்ச் ,ராயபுரம் பெரம்nullர் சர்ச்கள் ,பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம் ,கதீட்ரல் சர்ச்  உள்ளிட்ட தேவாலயங்கள் பேராலயங்களில் நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன. திருப்பலிகள் பல்வேறு மொழிகளில் விடிய விடிய நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் திருப்பலிகளில் கலந்து கொண்டு  வழிபாடு செய்தனர். இதேபோல் சென்னை புறநகர்,காஞ்சி,திருவள்ளுவர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்புப்பிரார்த்தனைகள் நடந்தது.பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago