முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுசத்திரம் அருகே லாரி விபத்து: பக்தர்கள் 3 பேர் பலி

புதன்கிழமை, 26 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் டிச.26 - நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கர்நாடக பஸ் மோதிய விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் உள்பட 3 பேர் பலியாயினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 8 ஐயப்ப பக்தர்கள் டவேரா காரில் சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் காரை புதுச்சத்திரம் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றி எதிரே ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருநதனர்.

அதே  இடத்தில் காருக்கு சற்று பின்னால் தருமபுரியைச் சேர்ந்த லாரி ஒன்று பேரிங் கட் ஆனதால் பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்த லாரி மணல் அள்ளி வருவதற்காக சென்றது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று 30 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு மதுரையை நோக்கி சென்றது.

அந்த பஸ் புதுச்சத்திரம் அருகே சென்றபோது திடீரென பழுதாகி நின்ற லாரியின் பின் பக்கத்தில் வேகமாக மோதியது. பஸ் மோதிய வேகத்தில் லாரி சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது மோதியது. இதில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் பகுதியைச் சேர்ந்த விஜய்(39), கிருஷ்ணா(45) ஆகிய  2 ஐயப்ப பக்தர்களும், தனியார் சுற்றுலா பஸ் டிரைவர் மோகன் பிளாட்டோ(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இறந்து போனார்கள். இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர் சுப்பிரமணி,க்ளீனர் சுப்பிரமணி மற்றும் லாரி உரிமையாள் தங்கவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதே போல் பஸ்சில் பயணம் செய்த டாக்டர்கள் பத்மபிரசாத்,தீபக்,பெண் டாக்டர் ஹேமா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மேலும் கர்நாடக மாநிலத்தின் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சுதாகர்,டாக்டர்கள் சித்தேகவுடா,சிவேகவுடா மற்றும் பஸ்சின் மாற்று டிரைவர் லட்சுமணன் ஆகியோர் லேசனா காயம் அடைந்தனர்.ஐயப்ப பக்தர் ஒருவரும் லேசான காயம் அடைந்தார். காயம் அடைத்தவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரியில் வரும் 27 மற்றும் 28 ந் தேதியில் அகில இந்திய மருத்துவர்கள் சங்க மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் இருந்து 10 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன்  பேர் புறப்பட்டு சென்றனர். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக மதுரை,ராமேஸ்வரன்  ஆகிய ஊர்களை சுற்றி பார்த்துவிட்டு செல்ல மதுரை சென்ற போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.ஐயப்ப பக்தர்கள் சாலையின் கிழக்கு புறத்தில் ரோட்டை விட்டு 50 அடி தூரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதேபோல் லாரியும் சாலையின் ஓரத்தில்தான் நின்று கொண்டிருந்தது.

பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள்,துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை,புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம்,ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் காயம் அடைந்தவர்களை நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமலை, ஏட்டு மணி, மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago