முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்: தெ.ஆ. நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

போர்ட் எலிசபெத், டிச. 28 - நியூசிலாந்து அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 3 -வது மற்றும் கடைசி டி -20 போட்டியில் தெ ன் ஆப்பிரிக்கா 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தெ.ஆ. தரப்பில் துவக்க வீரராக இறங்கிய டேவிட்ஸ் அபாரமாக பேட்டிங் செய்து அரை சத ம் அடித்து அணிக்கு முன்னிலை பெற் றுத் தந்தார். ஆன்டாங், மில்லர் மற்றும் பெகார்டியன் ஆகியோர் அவருக்கு பக் கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, மெக்லார ன் மற்றும் பாங்கிசோ ஆகியோர் சிறப் பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்த னர். பீட்டர்சன் மற்றும் கிளைன்வெல் ட் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். 

தெ.ஆ. மற்றும் நியூசிலாந்து அணிகளு க்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி டி - 20 போட்டி போர்ட் எலிச பெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்றது. 

இதில் முதலில் களம் இறங்கிய தெ. ஆ. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற் கு 179 ரன் எடுத்தது. இதில் 1 வீரர் அரை சதம் அடித்தார்.  

துவக்க வீரராக இறங்கிய டேவிட்சன் அதிகபட்சமாக, 51 பந்தில் 68 ரன் எடுத் தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக் சர் அடக்கம். தவிர, ஆன்டாங் 30 பந்தி ல் 48 ரன்னையும், மில்லர் 15 பந்தில் 28 ரன்னையும், பெகார்டியன் 11 பந்தில் 22 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரேஸ்வெ ல் 35 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிராங்ளின் மற்றும் ஹிரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடு த்தனர். 

நியூசிலாந்து அணி 180 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை தெ.ஆ. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9  விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்த 3 -வது மற்றும் கடைசி டி - 20 போட்டியில் தெ. ஆ. அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நியூசிலாந்து அணி தரப்பில், கேப்டன் மெக்குல்லம் அதிகபட்சமாக 22 பந்தில் 25 ரன் எடுத்தார். தவிர, குப்டில் 24 ரன் னையும், பிராங்ளின் 16 ரன்னையும், நீஷம் 12 ரன்னையும், எல். மெக்குல்ல ம் 17 ரன்னையும், பிரேஸ்வெல் 15 ரன் னையும், ஹிரா மற்றும் கொரே ஆகி யோர் தலா 12 ரன்னையும் எடுத்தனர். 

தெ. ஆ. அணி சார்பில், மெக்லாரன் மற்றும் பாங்கிசோ தலா 25 ரன்னைக் கொடுத்து தலா 3 விக்கெட் எடுத்தனர். தவிர, பீட்டர்சன் மற்றும் கிளைன்வெ ல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத் தனர் . இந்தப் போட்டியின் ஆட்டநா யகனாக டேவிட்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago