2-வது டெஸ்ட்: ஆஸ்தி., விடம் இலங்கை படுதோல்வி

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச. 29 - ஆஸ்திரேலியாவுடனான 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வரலாறு காணாத கேவலமான தோல்வியைச் சந்தித்துள்ளது. 3 வது நாளின் பாதியிலேயே போட்டியை முடித்து விட்டது ஆஸ்திரேலியா.

மெல்போர்ன் நகரில் நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ், 201 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை சுருட்டி விட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரையும் அது கைப்பற்றியது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை விட 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்ஸை ஆடி வந்த இலங்கை 24.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 103 ரன்களில் பரிதவித்தது.

இந்த நிலையில், குமார் சங்கக்கரா காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார். அதேபோல பிரசன்ன ஜெயவர்த்தனே, சனகா வெலகதரா ஆகியோர் காயம் காரணமாக பேட் செய்ய வர முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: