முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 1-ம் தேதி ஆர்பிஐ ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. 30 - இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 1 ஆம் தேதி ஆர்பிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய ஆர்பிஐ ஊழியர்கள் சங்கத் தலைவர் சமிர் கோஷ் கூறியதாவது:-

பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றித்தரும் ஆர்பிஐயின் 200 கவுன்ட்டர்களை மூட ஆர்பிஜ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆர்பிஐ சட்டம் 1934-ன்படி, நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை நுகர்வோருக்கு மாற்றித் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய கவுன்ட்டர்களை மூடும் நடவடிக்கை மேற்கொண்டால், ஆர்பிஐ ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். இதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்