இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் தோனி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், டிச.30 - பாகிஸ்தானிற்கு எதிராக அகமதாபாத் தில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டி - 20 போட்டியில் இந்திய அணி வெ ற்றி பெற்றது. இதற்கு கேப்டன் தோனி பந்து வீச்சாளர்களை பாராட்டி இருக்கிறார். 

கடைசி கட்டத்தில் இந்திய அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப் பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

பேட்டிங்கிற்கு ஏதுவான இந்த மைதா  னத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பா க பேட்டிங் செய்து ரன்னைக் குவித்தனர். ஆட்டத்தில் அனல் பறந்தது. இது ரசி கர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. 

இந்திய அணி தரப்பில், துவக்க வீரர்களான காம்பீர் மற்றும் ரகானே இருவ ரும் நன்கு ஆடி அணிக்கு நல்ல துவக்க த்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 44 ரன் சேர்த்தனர். 

இதனை பின்பு வந்த வீரர்கள் நன்கு பய ன்படுத்திக் கொண்டனர். அவர்கள் தங் கள் பங்கிற்கு சிறிது ரன் சேர்த்தனர். யுவராஜ் சிங் அதிரடியாக ஆடினார். 

சிங் 36 பந்தில் 72 ரன் சேர்த்தது குறிப்பி டத்தக்கது. இதில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் அடக்கம். இவரது ஆட்டம் இந்தி ய அணியின் வெற்றிக்கு கை கொடுத் தது. 

பின்பு இந்திய பெளலர்கள் நன்கு பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முக்கியமாக கடைசி நேரத்தில் சொத ப்பக் கூடிய இந்திய வீரர்கள் இந்த ஆட்டத்தில் சிக்கனமாக பந்து வீசினர். 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. யுவ ராஜ் சிங் 72 ரன்னும், தோனி 33 ரன்னு ம் எடுத்தனர். தவிர, காம்பீர் 21 ரன்னு ம், ரகானே 28 ரன்னும், கோக்லி 27 ரன் னும் எடுத்தனர் 

பின்பு ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவ ரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடு த்தது. இதனால் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொட ரை 1- 1 என்ற கணக்கில் சமனாக்கியது. 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின் போது, இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங்கும், தொடர் நாயகனாக மொகமது ஹபீசும் தேர்வு செய்யப்பட்டனர்.  

இந்தப் போட்டி குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததாவது - கடைசி கட்டத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்க ள் சிறப்பாக செயல்பட்டனர். அதனா லேயே வெற்றி வசப்பட்டது. நெருக்க டியான நிலையில் அவர்கள் பொறுப்பு டன் செயல்பட்டார்கள். எந்த நேரத்தில் எப்படி பந்து வீச வேண்டுமோ அதற்கு தகுந்தபடி திட்டமிட்ட படி செயல்பட்டது பாராட்டுக்குரிய து. யுவராஜ் சிங் கிற்கு இந்த ஆட்டம் மிகச் சிறப்பானது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: