முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை அவமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேசவிடாமல் அவமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக பாரதப் பிரதமர் தலைமையில் 27.12.2012 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற  தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வறுமையை குறைப்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தாதது, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாமல், அந்நிய முதலீட்டாளர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருவது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாதது,  தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தாதது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்ப வியாபாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, குறைந்த விலையில் அதிக சானல்களை ஏழை, எளிய மக்கள் கண்டு களிக்க வழிவகை செய்திருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு அனுமதியை வழங்காதது, என தமிழகத்தின் ஒவ்வொரு நியாயமான கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதாகக் குற்றஞ் சாட்டி பேசிக் கொண்டிருந்த போது, 

பத்து நிமிடம் முடிவடைந்துவிட்டதால் பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு மணியடிக்கப்பட்டது. 

தமிழ் நாட்டின் தேவைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், தமிழ் நாட்டிற்கு இழைக்கப்பட்ட அnullதிகள் குறித்தும், பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மிகப் பெரிய ஆவணம் குறித்தும் பத்து நிமிடங்களில் கருத்துகளை தெரிவிக்க இயலாது என்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்திருந்தும், இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல், காங்கிரஸ் அல்லாத மாநில முதலமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, 10 நிமிடங்களுக்குள் பேச வேண்டும் என்ற புதிய அடக்கு முறையை வேண்டுமென்றே அறிமுகப்படுத்தி, ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் வகையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து, தமிழக மக்களையும், கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்திய, திமுக அங்கம் வகிக்கும் மத்திய மைனாரிட்டி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அடக்குமுறை நடைமுறையைக் கைவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்ற மக்கள் விரோத கொள்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கும், அதனை ஆதரித்து வணிகர்களை வஞ்சித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் கண்டனத்தையும், 

தமிழ் நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கைத் தமிழர்கள் அழிவதற்கு காரணமாக இருந்து செயல்பட்ட கருணாநிதியின் இன்றைய கபட நாடகங்களுக்கு கண்டனம்  தெரிவித்துக் கொள்கிறது. 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்