முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி: முதல்வர்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - எப்போதாவது ஒருமுறைதான் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு இப்போது வந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் உலக வரலாறு படைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் முதல்வருமான ஜெயலலிதா உறுதிபட தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதா ஆனித்தரமாக பேசியதாவது:-

என் அன்பு உடன் பிறப்புகளாகிய nullநீங்கள் நம் கழக அரசின் சாதனைகளையும்; மின் பற்றாக்குறையை போக்குவதற்காக நான் எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளையும் மக்களிடம் பொறுப்போடு எடுத்துரைத்து அவர்கள் இன்முகத்தோடு வழங்குகின்ற ஆதரவை, வாக்குகளாக மாற்றுகின்ற காரியத்தை nullநீங்கள் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையோடு ஆற்ற வேண்டும். 

இதன் மூலம், அ.தி.மு.க. என்னும் கழகத்தின் பெயரில் அனைத்திந்திய என்கிற வார்த்தையை நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.   சேர்த்ததற்கான காரணத்தை வரக் கூடிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஈட்டப் போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகிற்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டும்.

இந்தத் தருணத்தில் நான் உங்களிடம் வைக்கின்ற கோரிக்கை, ஒற்றுமையை பேணுங்கள்; கழகம் நமக்கென்ன செய்தது என்பதைவிட கழகத்திற்காக நாம் என்ன செய்தோம்? என்பதை கருத்தோடு நினைத்துப் பாருங்கள்.  இதை வலியுறுத்துவதற்கு ஒரு கதை தான் இந்தத் தருணத்தில் எனக்கு நினைவிற்கு வருகின்றது.

ஒரு பெரிய மல்யுத்த வீரன் களம் இறங்கிய போட்டிகளில் எல்லாம் எதிரிகளை துவம்சம் செய்து வெற்றிகளை குவித்து வந்தவன்.  ஒரு முறை  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.  அப்போது அவனது ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்று null பெரியவனா? நான் பெரியவனா? என்று பெருமை பேசிக் கொண்டிருந்தன. 

கட்டை விரல் சொன்னது ஐந்து விரல்களிலும், அதிமுக்கியமான விரல் நான் தான்.  என்னை கழித்துவிட்டுப் பார்த்தால் மொத்த கைக்குமே மரியாதை இருக்காது.  அதனால் தான் ஏகலைவனிடம் துரோணாச்சாரியார் கட்டை விரலை காணிக்கையாகக் கேட்டார் என்று பெருமை பேசியது.  உடனே ஆள் காட்டி விரல் சொன்னது, உலகத்தில் ஒரு மனிதனுக்கு நல்லது எது, கெட்டது எது என சுட்டிக் காட்டுகிற நான் தான் உயர்ந்தவன் என்றது.  உடனே நடுவிரல் சொன்னது போங்கடா முட்டாள்களே! ஐந்து விரல்களையும் ஒன்றாக்கிப் பார்.  எல்லோரையும் விட உயர்ந்து நிற்பவன் நான் தான்.  அதனால் நான் தான் உயர்ந்தவன் என்றது.  

அடுத்து பேசிய மோதிர விரலோ முத்து, பவளம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்களையும் அணிவித்து அழகு பார்க்கிற விலை மதிப்பில்லாத விரல் நான் தான்.  அதனால், நான் தான் உயர்வானவன் என்றது.  ஆனால், கடைசியில் சுண்டு விரல் என்னதான் சொல்லப் போகிறது என்று பார்த்தால் அது சொன்னது எல்லாம் வல்ல இறைவனின் முன் நின்று சாஷ்டாங்கமாய் வழிபாடு புரிகிற போது இறைவனின் கடாட்சம் முதலில் இருக்கக் கூடிய சுண்டு விரலாகிய எனக்கு தான் கிடைக்கும்.  எனவே, நான் தான் பாக்யசாலி நான் தான் உயர்ந்தவன் என்றது.  

இப்படி, ஐந்து விரல்களும் null பெரியவனா? நான் தான் பெரியவன் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த போது அந்த ஐந்து விரல்களுக்கும் சொந்தமான மல்யுத்த வீரனை இது தான் தருணம் என காத்திருந்த எதிரி ஒருவன் தாக்க முயற்சித்தான்.  அப்போது, ஐந்து விரல்களும் விழித்துக் கொண்டு ஒன்றாகி எதிரியை ஓங்கி அடிக்கவே வீழ்ந்து போனான் எதிரி.  

ஆக, இந்தக் கதை சொல்லும் nullநீதி போல, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய nullநீங்கள் எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் உயர்வானவர்கள் தான்; திறமைசாலிகள் தான். nullநீங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து கடமையாற்றுகின்ற போது நம் கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகத்தில் ஓர் இயக்கம் இல்லை என்பதை nullநீங்கள் உணர்ந்து செயல்படுங்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, ஒரு இயக்கத்தின் ஆயுட் காலம் என்பதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, சில அரிய வாய்ப்புகள் எப்போதாவது வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அளப்பரிய சாதனை புரிகின்ற வாய்ப்பு எப்போதாவது ஒரு முறை தான் வரும்.  அதைப் போலவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு அரசியல் இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும், உலக வரலாறு படைக்கின்ற ஒரு வாய்ப்பு சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு சாதனை புரிகின்ற வாய்ப்பு எப்போதாவது ஒரு முறை தான் வரும்.  அந்த வாய்ப்பு வருகின்ற போது, நாம் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளும் கூடிவர வேண்டும்.  அப்படிப்பட்டொரு நிலைமை நமக்கு அடுத்து நடைபெறுகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அமையப் போகிறது.  வருகின்ற வாய்ப்பை தவறவிட்டுவிட்டால், இந்த வாய்ப்பு மீண்டும் அடுத்தமுறை வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், அந்த வாய்ப்பு திரும்ப வராமலே போய்விடலாம்.  

ஆகவே, ஒரு மனிதனின் வாழ்க்கையில், ஒரு அரசியல் இயக்கத்தின் வாழ்க்கையில், ஒரு அமைப்பின் ஆயுட்காலத்தில் எப்போதாவது ஒருமுறை தான் மிக அரியதொரு சந்தர்ப்பம் கிடைக்கும்.  உலகப் புகழ் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும்.  அந்த சந்தர்ப்பம் வருகின்றபோது, அதைப் பயன்படுத்திக் கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொண்டு, அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.  நம்முடைய பாதையை நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும். நம்மைப் பொறுத்தவரை யாரையும் சார்ந்திருக்க முடியாது. யாரையும் சார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.  வேறு எத்தனையோ கட்சிகள் இருக்கலாம்.  அந்தக் கட்சிகள் எல்லாம், வேறு பெரிய கட்சிகளை, தேசியக் கட்சிகளை சார்ந்திருக்கலாம். அது அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்தது. நம்மைப் பொறுத்தவரை யாரையுமே சார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் தகப்பனாரை சார்ந்திருப்பார்கள்.  பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள்.  வயதான பிறகு பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். 

ஆனால், என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பணை எனக்கு இல்லை.  யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை.  எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்லமாட்டேன்.  இது விதி.  தலையெழுத்து.  அதுபோல், இன்றைக்கு தேசிய அளவில் பெரிய கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால், ஒன்று காங்கிரஸ், மற்றொன்று பி.ஜெ.பி.  இன்றைக்கு இவர்கள் காங்கிரஸ் பெயரில் யு.பி.ஏ. என்று ஒரு கூட்டமைப்பை வைத்திருக்கிறார்கள்,  ஒரு கூட்டணியை வைத்திருக்கிறார்கள். பி.ஜெ.பி. தலைமையில் என்.டி.ஏ., என்ற ஒரு கூட்டணியை வைத்து இருக்கிறார்கள். வேறு எத்தனையோ கட்சிகள், சிலர் காங்கிரசோடு சேர்கின்றனர், சில கட்சிகள் பி.ஜெ.பி.யோடு சேருகின்றன.  

ஆனால், அ.தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை தனித்தே நின்றாக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்திய அரசு, இந்தியாவை ஆளுகின்றது.  கர்நாடகத்திலே பி.ஜெ.பி. அரசு ஆளுகின்றது.  ஆனால், அங்கே காங்கிரசானாலும் சரி, கர்நாடகத்தில் பி.ஜெ.பி.யானாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவேரி தண்ணீர் கூட தந்துவிடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக இருக்கின்றன.  நமக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடாது, நியாயமாக நமக்கு காவேரியில் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கக்கூடாது என்பதில் பி.ஜெ.பி.யும் முனைப்பாக இருக்கிறது,  காங்கிரசும் முனைப்பாக இருக்கிறது.  

இங்கே, தமிழ்நாட்டில் இல்லாத ஒரு ஒற்றுமை அங்கே கர்நாடகத்தில் இருக்கிறது. அண்மையில் எப்படியாவது தமிழகத்தின் உரிமையை பெறவேண்டும், காவேரி nullநீரைப் போராடி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப உச்ச nullதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்து நான் போராடி கொண்டிருக்கின்ற வேளையில், அங்கே மத்தியில் கர்நாடகத்தைச் சேர்ந்த, இத்தனை காலமாக மந்திரியாக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா, மற்றும் மத்திய அமைச்சராக இருக்கின்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரப்ப மொய்லி, ஆகியவர்கள் கர்நாடகாவில் உள்ள பி.ஜெ.பி. முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை அழைத்துக் கொண்டு, பிரதமரைச் சென்று பார்க்கிறார்கள்.  அங்கே கர்நாடகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற காங்கிரஸ்காரர்களும் துணைக்கு செல்கிறார்கள். பிரதமரைச் சந்திக்க காங்கிரஸ் எம்.பி.க்களுடன், பி.ஜெ.பி. எம்.பி.க்களும் செல்கிறார்கள்.  அவர்கள் ஒற்றுமையாக பிரதமரைச் சென்று பார்த்து வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால், என்ன வந்தாலும் சரி, தமிழகத்திற்கு காவேரி nullநீரை nullநீங்கள் விட்டுவிடக்கூடாது.  இதில் கருணாநிதியும் சேர்ந்து இருக்கிறார்.  தி.மு.க.வும் சேர்ந்து இருக்கிறது.  

இங்கே தமிழகத்தில் ஏதோ காவேரி nullநீர் நமக்கு கிடைப்பதற்காக இவர்கள் அங்கே போய் பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் வைத்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், உண்மையில் நடந்தது என்ன? உண்மையில் நடந்தது வேறு.  டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் போய் பிரதமரைப் பார்த்து என்ன நடந்தாலும் சரி, இந்தக் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டு விடாதீர்கள் என்றுதான் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்வி.  இங்கு கேள்வி என்ற வார்த்தை எதற்காக சொல்கிறேன் என்றால், பத்திரிகைகள் எப்படியும் இதை வெளியிடுவார்கள்.  அதனால் கேள்வி என்று சொல்கிறேன். ஆக இதுதான் நடந்த உண்மை.  ஆக, தி.மு.க.வை விட்டுவிடுங்கள்.  அது எப்படிப் பார்த்தாலும் அது முடிந்து போன கதை.  அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.  நம்முடைய பாதையை நாம் தான் வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.  ஆகவே, நாம் அனைவரும் உணர வேண்டிய ஒரு உண்மை, நாம் பி.ஜெ.பி.யையும் சார்ந்திருக்க முடியாது, காங்கிரசையும் சார்ந்திருக்க முடியாது.  

ஆகவே, தமிழ்நாட்டின் உரிமைகளை நாம் பெற வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் தனியாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலேயும் வெற்றி பெற்று, மத்தியில் நாம் சென்று அனைத்து முடிவுகளையும் நாம் செய்கின்ற, நாம் எடுக்கின்ற அதிகாரத்தை நாம் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்து, சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

நம்முடைய சாதனைகள் என்றால், ஏராளமான சாதனைகள் உள்ளன.  கடந்த ஆண்டு, 2011 மே 16​ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை, அத்தனை சாதனைகளை நம் அரசு செய்திருக்கிறது.  வேறு கட்சிகளில், வடமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்கள் நடத்துகின்ற செயற்குழுக் கூட்டங்களில் இதைப்பற்றி பேசுகின்றபோது வியந்து போகிறார்கள்.  ஒரு மாநிலத்தில், ஒரு மாநில அரசு, ஒரு மாநில முதலமைச்சர் இத்தனை சாதனைகளை செய்திருக்கிறார்களா, அதிலும் மத்திய அரசின் உதவி இல்லாமலேயே இவ்வளவு செய்திருக்கிறார்களா என்று வியந்து போகிறார்கள்.  இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நம் சாதனைகள் ஏராளம், ஏராளம்.

 ஆகவே, இன்று நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களில் நாம் புரிந்துள்ள சாதனைகளில் ஒரு சிலவற்றைத்தான் சொல்ல முடிந்தது.  இல்லையென்றால், அது மிக nullநீண்டதொரு புத்தகமாக ஆகிவிடும்.  இன்னும் ஏராளமான சாதனைகள் உள்ளன.  இவற்றையெல்லாம் நம் கழக உடன்பிறப்புகளாகிய நீnullங்கள், குறிப்பாக தலைமைக் கழகப் பேச்சாளர்கள், மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும், எடுத்துச் செல்ல வேண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

எப்படை வரினும் இப்படை வெல்லும் என்னும் நம்பிக்கையோடு கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் கருத்தோடு தொடங்குங்கள்.  வருங்காலம் நமதாகும்.  வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று சொல்லி, உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, 

அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க, என்று கூறி விடைபெறுகிறேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்