முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி இயக்குநர் உட்பட 5 பேர் மீது புகார்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

கரூர் ஜன. 01 - கரூர் தமிழக போக்குவரத்துத்துரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கலைஞர் டி.வி. இயக்குநர் உட்பட 5 பேர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது சகோதரர் அசோக்குமார். கரூர் பெரியகுலத்துப்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கடந்த ஆண்டு தன்னைக் கடத்திச் சென்று சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டதாக அமைச்சர் மற்றும் அவரது தம்பி மீது வழக்கு தொடுத்தார். இதேபோல் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சேரன் என்பவர் கரூரில் தான் நடத்திவந்த அரசு கேபிளை அபகரித்துக் கொண்டதாக அதே நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இவ்விரு வழக்குகளையும் தி.மு.க. வழக்கறிஞர் மணிராஜ் நடத்தி வந்தார். இவ்வழக்கு சம்மந்தமாக தனது பெயருக்கு அவதூறு உண்டாக்கும் வகையில் வக்கில் மணிராஜ், காலைக்கதிர் நாளிதழின் எடிட்டர் வரதன், கரூர் கலைஞர் டி.வி. நிருபர் தண்டபாணி, கலைஞர் டி.வி. முதன்மை செய்தி ஆசிரியர் தயாள் மற்றும் கலைஞர் டி.வி  மேலாண்மை இயக்குநர் அமிர்தம் ஆகிய 5 பேர் மீதும் அமைச்சரின் தம்பி அசோக்குமார் கரூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தன்மீது பொய்யான தகவல்களைக் காட்டி வழக்கு தொடுத்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் செய்திகளை வெளியிட்ட 5 பேர் மீது விசாரனை நடத்துமாறு மனு ஒன்றில் கேட்டுக் கொண்டார். இதே போன்று கரூர் நீதி மன்றத்தில் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சேரன் என்பவரால் தரப்பட்ட அவதூறு செய்தியை வெளியிட்ட காலைக்கதிர் நாளிதளின் எடிட்டர் மற்றும் சேரன் ஆகியோர் மீது விசாரனை நடத்த மற்றொரு மனுவில் கேட்டுக்கொன்டார் கரூர் நீதி மன்றத்தில் தொடுத்த இவ்வழக்கில் விசாரணைக்குப் பிறகு மேற்படி 6 பேரும் வரும் 28.01.2013 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவினால் எதிரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago