முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய பாடுபடுவோம்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.1 - மத்தியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில ஆட்சி அமைய எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும் நடைபெற்றது. 

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை ஆகியோர் வாசித்த தீர்மானங்கள் வருமாறு:-   முக்கிய தீர்மானங்கள் வருமாறு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் எப்பொழுது வந்தாலும், ஜெயலலிதாவின் ஆசியோடும், வழிகாட்டுதலுடனும் தேர்தலை திறம்பட எதிர்கொண்டு, அல்லும்  பகலும் அயராது பாடுபட்டு, கண்துஞ்சாது துடிப்புடன் செயல்பட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய இந்த பொதுக்குழு சூளுரைக்கிறது.

3 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை நடத்தி, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை வளமிகுந்த மாநிலமாக ஆக்க தொலைநோக்கு திட்டம் 2023ஐ தீட்டியுள்ள முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சத்துணவு திட்டத்தில் புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரையும் சமமாக பாவித்து, மதசார்பற்ற நிலையை கடைபிடித்து வரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் பணியில் 30 ஆண்டுகளையும், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. 

எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை புனரமைத்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வைர விழாவினை சிறப்பாக நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது. 

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றத்தை அணுகி வெற்றி கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. 

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.   

வழக்கறிஞர்களுக்கு 5.25 லட்சம் ரூபாய் சேமநல நிதியினை அறிவித்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது. இளைஞர் காவல்படை என்னும் புதிய அமைப்பை காவல்துறையில் ஏற்படுத்தி 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது. 

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வழங்க வகை செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக தொழில் துறை வரலாற்றில் புதிய சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி கூறும் வண்ணம் எண்ணற்ற நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.  அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்து மதச் சார்பற்ற நிலையைக் கடைப்பிடித்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. 

ஸ்ரீரங்கம், பழனி ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அறிவித்துள்ளதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் மருத்துவ பட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமைகேபிள் டிவி ஏகாதிபத்தியத்தை தடுக்கும்  நோக்கத்தோடு தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமையை வழங்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் எண்ணற்ற நிவாரண உதவிகளை உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்