முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் புத்தாண்டையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம், ஜன. - 2- ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது. 2012-ம் ஆண்டு முடிந்து நேற்று 2013-ம் ஆண்டு தொடங்கியது. இந்த புத்தாண்டை அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்று கொண்டாடினர். ஆதிகாலையில் எழுந்ததும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், உயர்அதிகாரிகள் என அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தணையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ரோமன்சர்ச் தேவாலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தணையில் கலந்துகொண்டவர்கள் புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நள்ளிரவில் மாவட்டம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை மகிழச்சியுடன் வரவேற்றனர். வயதில் மூத்தவர்களிடம் சிறியவர்கள் ஆசிபெற்றனர். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் அதிகாலை முதலே ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் புத்தாடை அணிந்து பயபக்தியுடன்சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது. புத்தாண்டையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிக பக்தர்கள் வரவால் சாமி தரிசனம் செய்ய நீண்;ட நேரமானது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் போலீசார் தீவி ரோந்து பணியில் ்டுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்