முக்கிய செய்திகள்

பிளஸ் டூ தேர்வு முடிவு தாமதமாகும்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Exam

சென்னை, ஏப்.18 - தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மாதம் பிளஸ்டூ தேர்வு நடந்தது. இவற்றின் தேர்வு முடிவுகள் தாமதமாகும் என தெரிகிறது. பிளஸ்டூ தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கிறது. ஆங்கிலம் மற்றும் மொழிப்பாட விடைத்தாள்கள் இன்னும் திருத்தி முடியவில்லை. இப்பணிகள் இம்மாதம் 20ம் தேதி வரை நடக்கும். வழக்கமாக மே 2 வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2 வது வாரத்தில் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் சட்டசபை தேர்தல் முடிவு 13ம் தேதி வெளியாகிறது. எனவே 14ம் தேதிக்கு முன்னதாக வெளியிட வாய்ப்பில்லை. எதிர்பாராத விதமாக தேர்ச்சி விகிதம் குறைந்தால் இதுகுறித்து அரசிடம் தேர்வுத்துறை ஆலோசிக்கும். இது போன்ற சிக்கல்க் ஏற்பட்டால் புதிய அரசு அமைந்த பிறகு புதிய கல்வி அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பிறகே பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எனவே பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே மாதம் கடைசி வாரத்தில் தான் வெளியிடப்படும் நிலைமையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: