2-வது ஒரு நாள்: பாக்., 85 ரன் வித்தியாசத்தில் வெற்றி

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜன. 4 - இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தா வில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 85 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், துவக்க வீரர் நசீர் ஜாம்ஷெட் சதம் அடித்தார். ஹபீஸ் அரை சதம் அடித்தார். இருவரு ம் நன்கு ஆடி அணிக்கு நல்ல அடித்தள த்தை அமைத்துக் கொடுத்து முன்னி லை பெற உதவினர். 

பின்பு பெளலிங்கின் போது, ஜூனைத் கான் மற்றும் சயீத் அஜ்மல் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக உமர் குல், மொகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் பந்து வீசி னர். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பீல்டிங் கை தேர்வு செய்தது. பாக். அணி தரப் பில், நசீர் ஜாம்ஷெட் மற்றும் மொகம து ஹபீஸ் இருவரும் ஆட்டத்தை துவக் கினர். 

இந்திய அணி சார்பில் பந்து வீச்சாளர் கள் இந்த ஆட்டத்தில் நன்கு பந்து வீசி பாகிஸ்தான் ரன் குவிப்பை கட்டுப்படு த்தினர். ஆனால் பின்பு களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் இதனை சரியாக பய ன்படுத்த தவறியால் அணிக்கு தோல்வி ஏற்பட்டது. 

பாகிஸ்தான் அணி இறுதியில் 48.3 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந் து 250 ரன்னை எடுத்தது. இதில் 1 வீரர் சதமும், 1 வீரர் அரை சதமும் அடித்தனர். 

துவக்க வீரர் நசீர் ஜாம்ஷெட் அதிகபட்சமாக  124 பந்தில் 106 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஜடேஜா வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கே ட்ச் கொடுத்து வெளியேறினார். 

மற்றொரு துவக்க வீரரான மொகமது ஹபீஸ் 74 பந்தில் 76 ரன் எடுத்தார். இதி ல் 10 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஜடேஜா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். 

இவர்கள் இருவரைத் தவிர, மற்ற வீரர் கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்த னர். சோயிப் மாலிக் 24 ரன்னையும், உமர் குல் 17 ரன்னையும், யூனிஸ் கான் 10 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், இஷாந்த் சர்மா 34 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். ஜடேஜா 41 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, புவனேஷ் குமார், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத்தனர். 

இந்திய அணி 251 ரன் எடுத்தால் வெற் றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ் தான் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னை எடுத்தது. 

இதனால் பாகிஸ்தான் அணி இந்த 2- வது போட்டியில் 85 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்று தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்திய அணி சார்பில், கேப்டன் தோ னி மற்றும் சேவாக் இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். 

கேப்டன் தோனி அதிகபட்சமாக, 89 பந்தில் 54 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.  

சேவாக் 43 பந்தில் 31 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, காம்பீர் 11 ரன்னையும், ரெய்னா 18 ரன் னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், ஜூனைத் கான் 39 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். சயீத் அஜ்மல் 20 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, உமர் குல் 2 விக்கெட்டும், ஹபீஸ் மற் றும் சோயிப் மாலிக் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: