முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் - நடிகைகள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - மத்திய அரசின் சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (7-ந் தேதி) நடிகர், நடிகைகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசு ரூ.12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. டி.வி நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இந்த வரியை விதித்துள்ளனர். ஜூலை மாதத்தில் இருந்து இது அமலுக்கு வந்து இருக்கிறது.

இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினர். சேவை வரிவிதிப்பை கண்டித்து நடிகர், நடிகைகள் நாளை (7​ந்தேதி) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்துக்கு போலீசிடம் அனுமதி கேட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே படப்பிடிப்புகளில் இருப்பவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் பங்கேற்கின்றனர். இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரில் சாமியானா பந்தல் அமைக்கப்படுகிறது. உண்ணாவிரதத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

நடிகர் சங்கத்தில் இரண்டாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் வருடத்துக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர். அவர்களுக்குதான் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago