3-வது ஒரு நாள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 6 - இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியி ல் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் தொடரை கை ப்பற்றி விட்ட நிலையில் இந்தப் போ  ட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெ ற்றி கிடைக்குமா? என்ற எதிர்பாப்பு ஏற்பட்டு உள்ளது. 

கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையி லான பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிட ப்பட்டது. இதில் ஏற்கனவே 2 போட்டி கள் முடிந்து விட்டன.  

முன்னதாக நடந்த முதல் 2 போட்டியி லும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற் று இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கி ல் கைப்பற்றியது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகி ஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி டெல்லி யில் உள்ள பெரோசாகோட்லா மை தானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 12.00 மணிக்கு துவங்குகிறது. 

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பெளலிங்கில் சிறப் பான ஆட்டத்தை திறனை வெளிப்படு த்தி வெற்றி பெற்று உள்ளது. 

பாகிஸ்தான் அணியில் நசீர் ஜாம்ஷெட் , மொகமது ஹபீஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஆத ரவாக யூனிஸ்கான், சோயிப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் ஆடி வருகின்றனர். 

வேகப் பந்து வீச்சில் ஜூனைத் கான் மற்றும் உமல் குல் ஆகியோர் கலக்கி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சயீத் அஜ்மல் மற்றும் மொகமது ஹபீ ஸ் ஆகியோர் பந்து வீசி வருகின்றனர். 

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டு நன்றாக இருந்த போதிலும், இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் முழு அளவில் திறனை வெளிப்படுத்த வில்லை. இதுவே தோ ல்விக்கு முக்கிய காரணமாகும். 

இந்தத் தொடரில் கேப்டன் தோனி சத ம் அடித்து இருக்கிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். சேவா க், ரெய்னா மற்றும் அஸ்வின் ஆகி யோர் அவருக்கு ஆதரவாக ஆடி வருகி ன்றனர். 

இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த் த வகையில் அமையவில்லை. அதே போல பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீச வில்லை. 

எனவே இந்திய அணியின் பேட்ஸ்மே ன் மற்றும் பெளலர்கள் இருவரும் இந்த ப் போட்டியில் சிறப்பான பங்களிப் பை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான இந்த 3-வது போட்டி டெல்லியில் உள்ள பெரோ சா கோட்லா மைதானத்தில் பிற்பகல் 12.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்ரதர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிப ரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: