சேவாகை மட்டும் நீக்கியது சரியல்ல - பேடி

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடில்லி. ஜன, - 8 - இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடி தொடக்க வீரர் சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சேவாக் நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரபல சுழற்பந்து வீரருமான பிஷன்சிங் பெடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஷேவாக்கை மட்டும் அணியில் இருந்து நீக்கியது சரிதானா?. தேர்வு குழுவின் இந்த முடிவு சரியானது அல்ல. அவரை நீக்கியது மட்டுமே தீர்வாகிவிடாது. ஷேவாக் நீக்கத்துக்கான காரணம் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இதற்காக வீரர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு பெடி கூறியுள்ளார். இதேபோல முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் ஷேவாக் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் சேர்க்கப்படவில்லை. அவர் கடந்த 12 மாதத்தில் 11 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதில் அவரது சராசரி 22.54 ஆகும். இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்திய அணி வருமாறு: தோனி(கேப்டன்), புஜாரா, கம்பீர், கோலி, யுவ்ராஜ் சிங், ரோகித் சர்மா, ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, அஜின்கியா ரஹானே, அசோக் டிண்டா, பி.குமார், ஷமி அகமட், அமித் மிச்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்: