இந்திய பேட்ஸ்மென்களுக்கு இன்ஸ்விங் ஆடத் தெரியாதா?

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடில்லி. ஜன, - 8 - இந்திய முன்னணி பேட்ஸ்மென்களை குறிப்பாக சேவாகை ஆட்டிப்படைத்து அணியிலிருந்தே தூக்கச்செய்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறுகையில் இந்திய பேட்ஸ்மென்களுக்கு இன்ஸ்விங்கர் வீசுமாறும் வாசிம் அக்ரம் கூறிய அறிவுரையே உதவியது என்றார்.
ாநான் சீரான வேகத்தில் அவுட் ஸ்விங்கர் வீசும் பந்து வீச்சாளர்தான். ஆனால் வாசிம் அக்ரம்தான் கூறினார், இடது கை இன்ஸ்விங்கர் வலது கை பேட்ஸ்மென்களுக்கு குறிப்பாக இந்திய பேட்ஸ்மென்களுக்கு சரியாக ஆட வராது என்று வாசிம் அக்ரம் என்னிடம் கூறினார். லாகூருக்கு இன்று செல்லும்போது ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை வெளியே கொண்டு செல்வதைத்தான் அதிகம் வீசுவர் சேவாக் அந்த லெந்தை கணித்து விட்டார் கொன்று விடுவார், அதனால் நான் சற்றே வொர்க் அவுட் செய்தேன், சேவாகிற்கு இன்ஸ்விங்கரில் பலவீனம் இருப்பது தெரிந்தது. வாசிம் அக்ரம் அறிவுரையின் அடிப்படையில் நான் பயிற்சியாளர் மொகமது அக்ரமுடன் இணைந்து இதனைப் பயிற்சி செய்தேன். 3 போட்டிகளில் சேவாகை விளையாடிய இருமுறையும், கோலியை 3 முறையும் வீழ்த்தி இருவரையும் தனது செல்லப்பிள்ளைகளாக ஆக்கி விட்டார் ஜுனைத் கான். கம்பீர், யுவ்ராஜ் சிங்கும் இவரை சரியாக ஆட முடியவில்லை. என்று இந்திய வீரர்களின் கோளாறான உத்தியை வெளிப்படுத்திய ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: