மதுரை மாவட்ட ஓபன்சதுரங்க போட்டி: டால்பின்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

மதுரை, ஜன. - 8 - சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை சோழவந்தான் விவேகானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக நடந்த ஓப்பன் சதுரங்க போட்டியில் மதுரை டால்பின் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மூன்று பிரிவுகளாக இரு பாலருக்கும் நடந்த இந்த போட்டிகளில் மதுரை டால்பின் பள்ளியை சேர்ந்த அஸ்வின் குமார் 10 வயது பிரிவிலும், மாணவன் ஷேக் அப்துல்லா 14 வயது பிரிவிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் 25 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் டால்பின் பள்ளி முன்னாள் மாணவி சீதாலெட்சுமி முதலிடத்தை கைப்பற்றினார். மேலும் யு. 14 வயது பிரிவில் மாணவர் கிரிநாத் மூன்றாம் இடம் பிடித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தாளாளர் ஏ.ஆர். ராமநாதன், பள்ளி முதல்வர் பத்மா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: