சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி - இலங்கை அவுட்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 8 - இலங்கை அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்தத் தொடரில் வா ஷ் அவுட்டானது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், வாடே சதம் அடித்தார். தவிர, கோவன், வார்னர், ஹியூக்ஸ், கேப்டன் கிளார்க், ஹஸ்சே ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பெளலிங்கின் போது, முன்னணி வே கப் பந்து வீச்சாளர்களான பேர்டு, ஸ்டார்க், சிட்லே மற்றும் ஜான்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக லியான் பந்து வீசினார். 

வார்னே மற்றும் முரளீதரன் கோப்பை க்கான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி யாவில் நடைபெற்றது. இதன் 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னி கிரிக் கெட் மைதானத்தில் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 87.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 294 ரன்னை எடுத்தது. இதில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

திரிமன்னே அதிகபட்சமாக, 151 பந்தில் 91 ரன் எடுத்தார். தவிர, கேப்டன் ஜெய வர்த்தனே 72 ரன்னையும், தில்ஷான் 34 ரன்னையும், சண்டிமால் 24 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்னை எடுத்து டெக்ளெர் செய்தது. இதில் 1 வீரர் சதமும், 2 வீரர்கள் அரை சதமும் அடித்தனர். 

இதில் கீப்பர் வாடே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 158 பந்தில் 102 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருதார். தவிர, வார்னர் 85 ரன்னையும், ஹியூக்ஸ் 87 ரன்னையு ம், கேப்டன் கிளார்க் 50 ரன்னையும், ஹஸ்சே 25 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இல ங்கை அணி 278 ரன் எடுத்தது. கருணா ரத்னே 109 பந்தில் 85 ரன் எடுத்தார். தவி ர கேப்டன் ஜெயவர்த்தனே 60 ரன்னையும், சண்டிமால் 62 ரன்னையும், மேத்யூஸ் 16 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 141 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற எளிய இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கி ய அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3 -வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்ப ற்றியது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், கோவன் 36 ரன்னையும், ஹியூக்ஸ்   34 ரன்னையு ம், கிளார்க் 29 ரன்னையும், ஹஸ்சே 27 ரன்னையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வேகப் பந்து வீச்சாளர் பேர்டும், தொடர் நாயகனாக கிளார்க்கு ம் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: