முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமானவரி பாக்கி: அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.10 - வருமான வரி பாக்கியை கட்டக்கோரி வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி என்ற புதிர் போட்டியை கடந்த 2001-02-ம் ஆண்டில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடத்தினார். இதில் அவருக்கு கிடைத்த வருமானத்தில் ரூ.ஒரு கோடியை 66 லட்சம் வரி செலுத்த வேண்டும். இதை கட்ட உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமிதாப்பச்சன், வாழ்க்கையில் மரணத்தையும் வருமானவரித்துறையையும் சந்தித்தாக வேண்டும். இந்த இரண்டும் தவிர்க்க முடியாதது என்றார். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி நடப்பேன் என்றும் அமிதாப்பச்சன் கூறினார். நீதிமன்றத்துடன் கசப்பான அனுபவம் ஏதாவது ஏற்பட்டதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமிதாப், உண்மையிலேயே இல்லை என்றார். போபர்ஸ் வழக்கில் என் பெயர் நீக்கப்பட்டது. இதற்கு காரணம் நான் உண்மையை பேசியதுதான். உண்மை நம்ப பக்கம் இருந்தால் நாம் வெற்றிபெறுவோம் என்றார் அமிதாப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony