வேகப் பந்துகளை ஸ்விங் செய்வது எனது பலம்: புவனேஷ்வர்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

நாக்பூர், ஜன. 10 - வேகப் பந்துகளை ஸ்விங் செய்வது எனது பலமாகும் என்று இந்திய அணியின் இளம் மித வேகப் பந்து வீச்சாள ரான புவனேஷ்வர் குமார் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தா ன் அணிகளுக்கு இடையே  இரண்டு டி - 20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி கள் கொண்ட தொடர் நடந்தது. டி - 20 தொடர் 1 - 1 என்ற கணக்கில் சம னில் முடிந்தது. பின்பு நடந்த ஒரு நாள் தொடரில் பாக். அணி 2- 1 என்ற கணக் கில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தானிற்கு எதிரான இந்தத் தொ டரில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இள ம் வீரரான புவனேஷ்வர் குமார் அறிமு கம் ஆனார். 

அறிமுகப் போட்டியிலேயே அவர் சிற ப்பாக பந்து வீசி தனது முத்திரையை பதித்தார். தற்போது கேப்டன் தோனி அவர் மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார். 

பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் நன்கு பந்து வீசியதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க இருக்கிறார். 

கேப்டன் குக் தலமையிலான இங்கி லாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. 

மீரட் நகரைச் சேர்ந்த குமார் 19 -வது வயது முதல் முதல்தர கிரிக்கெட் போ  ட்டிகளில் பங்கு கொண்டு வருகிறார். இதில் அவர் நன்கு பந்து வீசினார். 

இதனைத் தொடர்ந்து மே.இ.தீவு மற் றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரா   ன தொடரில் இந்திய ஏ அணிக்கு தேர் வு செய்யப்பட்டார். 

மேற்படி இரண்டு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்த குமாருக்கு நல் ல அனுபவம் கிடைத்தது. இது பின்பு அவருக்கு கைகொடுத்தது. 

குமார் 19 வயதாக இருக்கும் போது, ரஞ்சிக் கோப்பை போட்டியில் பங்கு கொண்டார். இதில் முதல் பந்தில் டெ ண்டுல்கரை வீழ்த்தியது அவருக்கு நல் ல பெயரை ஏற்படுத்தியது. 

டெண்டுல்கருடன் ஒரு நாள் ஓய்வறை யில் பங்கு கொள்ள வேண்டும் என்று குமார் கனவு கண்டார். ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் இடம் பெற்ற போது, சச்சின் இதிலிருந்து ஓய்வு பெ ற்று விட்டார். 

இது குறித்து குமாரிடம் கேட்ட போது, நான் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் தட்டையான ஆடுகளங் களில் பந்து வீசி வருகிறேன். பந்தை ஸ்விங் செய்வது எனது பலமாகும். வே கம் குறித்து நான் கவலை கொள்வது இல்லை. நான் எக்ஸ்பிரஸ் பந்து வீச்சா ளரல்ல. இது எனக்கு வெற்றியைப் பெ ற்றுத் தந்துள்ளது. எனவே எனது பந்து வீச்சில் மாற்றம் செய்ய விரும்பவில் லை என்றார் அவர். 

கடந்த 2007 -ம் ஆண்டு உ.பி. அணி சார் பில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளி ல் ஆடத் துவங்கிய குமார் கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பாக பந்து வீசி வரு கிறார். 

22 வயதில் குமார் 46 முதல் தர போட்டி களில் விளையாடி இருக்கிறார். இது அவருக்கு நல்ல முதிர்ச்சியை அளித்து உள்ளது. இதன் மூலம அவர் சிறந்த கிரி க்கெட் வீரராக உருவாகி இருக்கிறார். 

பாகிஸ்தானிற்கு எதிரான தொடரின் போது, கேப்டன் தோனி தன்னை உற் சாகப்படுத்தியதாகவும், இதனால் நன் கு பந்து வீச முடிந்தது என்றும் குமார் தெரிவித்தார். 

துலீப் கோப்பை போட்டியில் மத்திய மண்டல அணிக்காக ஆடிய குமார் வடக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன் எடுத்தார். இதனால் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் அவர் ஒரு ஆல்ரவுண்டராகவும் உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: