முதல் ஒருநாள்: இந்தியா - இங்கி., இன்று பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஜ்காட், ஜன. 11 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஜ்காட் நக ரில் இன்று நடக்க இருக்கிறது. கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையி லான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முன்னதா க 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெ ற்றது. 

28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இது தோனி யின் தலைமைக்கு பெரிய இழப்பா கும். 

அடுத்ததாக இந்தியா மற்றும் இங்கி லாந்து அணிகளுக்கு இடையே 5 போ  ட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி ராஜ்காட் நகரில் இன்று பிற்பகல் துவங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரை இழந்ததால் ஒரு நால் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டு உள்ளது. 

முதலில் இங்கிலாந்திற்கு எதிரான டெ ஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, பின்பு பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் 2- 1 என்ற கணக்கி ல் இழந்தது. 

மேற்படி இரண்டு தொடரிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் செ ய்யவில்லை. இதுவே தோல்விக்கு முக் கிய காரணமாகும். அதே நேரத்தில் எதி ரணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 

எனவே இந்த ஒரு நாள் தொடரில் இந் திய பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி த் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசி கர்கள் உள்ளனர். 

பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் மோசமாக ஆடியதால் துவக்க வீரர் சேவாக் நீக்கப்பட்டார். அவருக்கு ப் பதிலாக புஜாரா இடம் பெற்று இரு க்கிறார். 

பாகிஸ்தானிற்கு எதிரான  ஒரு நாள் தொடரில் கேப்டன் தோனி ஒருவர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தார். சே வாக்,காம்பீர், யுவராஜ் சிங், கோக்லி ரெய்னா ஆகியோர் சொதப்பி விட்டனர். 

எனவே இங்கிலாந்திற்கு எதிரான தொ டரில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் நன்கு ஆடி அணியின் மானத் தைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டு உள்ளது. 

பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் தோனி ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்தார். கடைசி போட்டியில் இந்திய அணி திரில் வெ ற்றி பெற்றது. இதில் அவர் ஆட்டநாயக ன் விருது பெற்றார். 

தவிர, கடந்த ஒரு நாள் தொடரில் இந் திய அணியின் இளம் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் சமிஅகமது ஆகியோர் சிறப்பாக பந்து வீசி னர். அவர்கள் இதிலும் அதனை தொட ர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாக அனுபவ ம் வாய்ந்த இஷாந்த் சர்மா இருக்கிறார். 

சுழற் பந்து வீச்சில் இந்திய அணி அஸ் வினையே நம்பி உள்ளது. ஆனால் சமீ ப காலத்தில் அவர் எதிர்பார்த்த அளவி ற்கு பந்து வீசவில்லை. அவருக்கு ஆதர வாக யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர். 

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் குக் மற்றும் இயான் பெல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர் பீட்டர்சன் , மார்கன் மற்றும் கீப்பர் கீஸ்வெட்டர் ஆகியோர் களம் இறங்க தயாராக உள்ளனர். 

டெஸ்ட் தொடரில் கலக்கிய ஆண்டர் சன் மற்றும் பிராட் இருவரும் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அவர்களு க்குப் பதிலாக பிரஸ்னன், பின், மற்றும் மீக்கர்  ஆகியோர் ஆட உள்ளனர். சுழற் பந்து வீச்சிற்கு ஆப் ஸ்பின்னர் டிரட்வெல் இருக்கிறார். 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), கெளதம் காம்பீர், புஜாரா, விராட் கோக் லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், சமி அகமது, அஸ்வின், ஜடேஜா, ரகா னே, ரோகித் சர்மா, அமித் மிஸ்ரா, மற் றும் அசோக் திண்டா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: