முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஏப்.-19 - சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகமும், வெள்ளி ரத தேரோட்டமும் நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் மேளதாளங்கள் முழங்க 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருஆவினன்குடி முருகபெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளி ரத தேரோட்டம் நடைபெற்றது. ரதத்தில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருந்து 4ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வெள்ளி ரதத்தில் வீற்றிருந்த முருகபெருமான் வள்ளி தெய்வானையை பயபக்தியுடன் தரிசனம் செய்து அருள்பெற்றனர்.  
 இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் உதவி ஆணையர் நடராஜன், செல்வசுப்பிரமணிய குருக்கள், சந்திரசேகர் குருக்கள், பிரசாத ஸ்டால் ஹரிகரமுத்து, சித்தநாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, கான்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி அறக்கட்டளை தலைவர் சுந்தரம், பேஸ்கார்கள் பன்னீர்செல்வம், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago