முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். கில் குண்டுவெடிப்பு: 115 பேர் பலியான பரிதாபம், 200 பேர்காயம்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

குவெட்டா, ஜன. - 12 - பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நான்கு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. குண்டு வெடிப்புகளில் 115 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாயகமாக கருதப்படும் குவெட்டாவில் மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குவெட்டா நகரில் உள்ள ஷியா சமூகத்தினரின் பில்லியர்ட்ஸ் அரங்கில் குண்டுவெடித்ததில் இவர்கள் கொல்லப்பட்டனர். ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சன்னி பிரிவு அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் இது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், முதல் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு கார் வெடிகுண்டையும் அந்தத் தீவிரவாத அமைப்பு வெடிக்க் செய்துள்ளது. சமீப காலத்தில் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரவாத தாக்குதல் இது என்று வர்ணிக்கப்படுகிறது. குவெட்டாவைத் தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன. இங்குதான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால் தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகள் போர்க்களம் போலக் காணப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன. குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று முன்தினம் மட்டும் மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago