நானும் ரெய்னாவும் இருந்திருந்தால் வெற்றி உறுதி - தோனி

சனிக்கிழமை, 12 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட், ஜன, - 13 - ராஜ்கோட்டில் நடைபெற்ற முத ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு காரணம் கடைசி 2 ஓவர்கள் மோசமாக வீசப்பட்டதுதான் என்று சாடிய தோனி தானும் ரெய்னாவும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் வெற்றி கைகூடியிருக்கும் என்றார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்னில் போராடி தோற்றது. கடைசி 2 ஓவர் மிகவும் மோசமாக இருந்தது. இது தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த ஆடுகளத்தில் 325 ரன் என்பது அதிகமான ஸ்கோர் தான். 280 அல்லது 290 ரன் கொடுத்து இருக்க வேண்டும். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. அனைத்து பேட்ஸ்மேன்களும் நன்றாக ஆடினார்கள். ஆனால் மிடில் ஆர்டர் வரிசையில் விக்கெட் விழாமல் இருக்கும் வகையில் ஏதாவது ஒரு ஜோடி நிலைத்து நின்று இருக்க வேண்டும். நான் மேலும் 2 ஓவர் களத்தில் இருந்தால் ஆட்டத்தின் தன்மை மாறி இருக்கும். ஷமி அகமதுவுக்கு பதிலாக அசோக் திணடாவை சேர்த்தது சரியான முடிவு தான். ஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் அனுபவம் வாய்ந்த பவுலர் தான் தேவை. அசோக் திண்டா அனுபவம் வாய்ந்ததோடு, யார்க் பந்து வீசிவதிலும் சிறந்தவர். இதனால் அவரை சேர்த்தோம். இவ்வாறு கூறினார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: