முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

இந்தோனேசி, ஜன, - 14 - இந்தோனேசியாவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகள் பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சுமத்ரா தீவு பகுதியில் இரவு 10.47 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. ரிக்டரில் 6.0 புள்ளிகள் பதிவாகி உள்ளது . எனினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!