முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் நியூஸிலாந்து திணறல் 43டி6; தெ.ஆ. 525டி8 டிக்ளேர்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

போர்ட், ஜன. - 14 - நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்து தடுமாரி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. ஹசிம் ஆம்லா 106, டூபிளெஸ்ஸிஸ் 69 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஆம்லா 110 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆம்லா-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து டீன் எல்கர் களம்புகுந்தார். சிறப்பாக ஆடிய டூபிளெஸ்ஸிஸ் சதத்தை நெருங்கினார். 99 ரன்களை எட்டிய அவர் சதமடிப்பதற்கு முன்னதாக இரு ஓவர்களை மெய்டனாக்கினார்.
ஒருவழியாக ஜித்தன் படேல் வீசிய 120-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார் டூபிளெஸ்ஸிஸ். அவர் 202 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் சதத்தை நிறைவு செய்தார். இதனால் 121-வது ஓவரில் 400 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா. இதனிடையே எல்கர் 86 பந்துகளில் அரைசதம் கடந்தார். அந்த அணி 467 ரன்களை எட்டியபோது டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 252 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ராபின் பீட்டர்சன் 8, டேல் ஸ்டெயின் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டீன் எல்கர் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் சதமடித்ததும் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித். அப்போது தென் ஆப்பிரிக்கா 153.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் குவித்திருந்தது. எல்கர் 170 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 103, கிளெய்ன்வெல்ட் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் பிரெஸ்வெல் 3 விக்கெட்டுகளையும், முன்ரோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நியூஸிலாந்து தடுமாற்றம்: பின்னர் முதல் இன்னிங்ணூஸ ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 1, வில்லியம்சன் 4, பிரெளன்லி 10, டிபிளின் 0, கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 13, முன்ரோ 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அந்த அணி 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. வாட்லிங் 11, பிரெஸ்வெல் 3 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டேல் ஸ்டெயின் கிளெய்ன்வெல்ட், ராபின் பீட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்