முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு,ஜன.15 - இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நேற்று கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது. 

பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுதத்தை அடிக்கடி மீறி வருகின்றனர். கடந்தவாரம் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பூஞ்ச்மாவட்டத்தையொட்டி இருக்கும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டத்தில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர். அதோடுமட்டுமல்லாது இந்திய வீரர்களின் தலையையும் துண்டித்து எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் இந்தியா கடும் கோபம் அடைந்தது. இந்தமாதிரியான சம்பவம் இனிமேல் நடந்தால் பகிரங்க விளைவுகள் ஏற்படும் என்றும் ராணுவ வீரரின் தலையை ஒப்படைக்கும்படியும் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் இதுகுறித்து பிரிகேடியர் மட்டத்தில் கொடியமர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. இதற்கு பாகிஸ்தான்  பல நாட்கள் கழித்து சம்மதித்தது. இதனையொட்டி நேற்று ஜம்மு பகுதியில் நேற்று இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே கொடியமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் அவர்களின் தலை கொய்யப்பட்டதற்கும் இந்திய ராணுவ அதிகாரிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்த மாதிரி இனிமேல் சம்மதித்தால் இந்திய ராணுவமும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!