முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜன.15 - இந்தியாவுடன் உறவை வளத்துக்கொள்ள தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சீனாவின் புதிய அதிபர் ஜி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினை நீண்டகாலமாக இருந்தாலும் இருநாடுகளிடையே உறவை வளர்த்துக்கொள்ள கடந்த 20 ஆண்டுகளாக முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி இருநாடுகளிடையே பல லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் வளர்ந்துள்ளது. மேலும் பொருளாதாரம்,விஞ்ஞானம், தொழில்நுட்பம் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே பதட்டம் குறைந்திருப்பதோடு இருநாட்டு மக்களுக்கும் பயன் உள்ளவையாக இருக்கிறது. அதனால் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சீனாவின் புதிய அதிபர் ஜின்பிங் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜின்பிங் எழுதிய கொடுத்த கடிதத்தை சீனாவின் தூதரக அதிகாரி டாய் பிங்காவோ கடந்த 11-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார். இந்தியா-சீனா இடையே உறவு சீரடைந்து வருவதால் இருநாடுகளிலும் ஒரு ஸ்திரமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று ஜின்பிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். பொதுவான வளர்ச்சியை அடைய இந்த உலகில் இந்தியாவுக்கும் சீனாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைப்பிரச்சினையை தீர்க்க நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் டாய் முக்கியப்பங்கு வகிக்கிறார். கடந்தவாரம் டெல்லியில் நடைபெற்ற பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா(பிரிக்ஸ்) நாடுகளின் உயரதிகாரிகள் கூட்டத்தில் டாய் கலந்துகொண்டார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஹூ ஜின்டாவோவுக்கு பதிலாக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பெய்ஜிங் நகருக்கு சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்து அனுப்பியிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!