முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பிக்ரம் சிங் மறுப்பு

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரா,ஜன.17 - இந்திய ராணுவம் அத்துமீறலில் எதிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலைமை தளபதி பிக்ரம் சிங் மறுத்து உள்ளார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு காவலில் இருந்த 2 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுவிட்டதோடு ஹெம்ராஜ் என்ற வீரரின் தலையை கொய்து கொண்டுசென்றுவிட்டது. பாகிஸ்தானின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தோடு அந்த நாட்டுடன் நல்லுறவு கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 

இந்தநிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹினா ரப்பான ஹெர் கூறுகையில் இந்திய ராணுவம்தான் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 3 பேர்களை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் ஹர் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தளபதி பிக்ரம் சிங் அடியோடு மறுத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இந்திய வீரர் ஹெம்ராஜ் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறவதற்காக பிக்ரம் சிங் மதுரை நகருக்கு வந்திருந்தார் ஹெம்ராஜ் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர் கூறியிருப்பதை அடியோடு மறுத்தார். மேலும் அவர் கூறுகையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒருபோதும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி சென்றதே இல்லை என்றும் கூறினார். இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!