முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணியின் கேப்டனாக திலகரத்னே தில்ஷான் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, ஏப்.- 19 - இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் கேப்டனாக திலகரத்னே தில்ஷான் அறிவிக்கப்பட்டார்.
10 வது உலகக் கோப்பை கிரிக்கெட்  இறுதி போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த போட்டி தொடரில் ஆரம்பத்தில் லீக் போட்டிகளில்   தடுமாறிய இந்திய அணி, முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் எளிய வெற்றிகளுடன் இறுதி போட்டிக்கு வந்த இலங்கை அணி, இந்திய அணியை எளிதில் வென்றுவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கியது. ஆனால் இறுதிப் போட்டியில் கடினமான இலக்கையும் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக சேஸ் செய்து வெற்றிபெற்றனர். இந்த வெற்றியின் மூலம் கடந்த உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றில் இலங்கையிடம்  தோல்வி அடைந்து தொடரிலிருந்தே வெளியேறியதற்கு  பழிதீர்த்தது இந்தியா.
உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று இலங்கை அணியின் கேப்டன் குமார் சங்ககாரா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு ஒரு சிறந்த கேப்டனை அணி நிர்வாகம்  தேர்ந்தெடுக்க போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக தான் உடனடியாக  பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். இருப்பினும் தான் இலங்கை  அணியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.  
இதேபோல் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியின்  துணை கேப்டனாக இருந்த மகேளா ஜெயவர்த்தனேவும் தனது துணை கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 20 - 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதையடுத்து திலகரத்னே தில்ஷான் மற்றும் ஏஞ்சலோ மாத்யூஸ் ஆகியோரின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் பரிசீலனை செய்தது. ஆனால் தற்சமயம் முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஏஞ்சலோ மாத்யூஸ் இன்னும் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் திலகரத்னே தில்ஷானே இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் துணை கேப்டன் பெயரை இன்னும் இலங்கை  கிரிக்கெட் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தில்ஷனின் வயது 34. இவர் ஏற்கனவே இலங்கை அணியின் டுவெண்டி - 20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் ஏற்கனவே ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இந்தியா, ஜிம்பாப்வே நாடுகள் இடையேயான  முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணியின்  கேப்டனாக இருந்து கோப்பையை வென்றவர்.  2008, 2009 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற டுவெண்டி - 20 உலகக் கோப்பை தொடர்களில் இலங்கை அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். 10 வது உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த பெருமைக்குரியவர் தில்ஷான். இவர் ஒருவர் மட்டுமே இந்த  உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago