ஆஸ்திரேலிய ஓப்பன்: செரீனா தோல்வி!

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 24  - ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரீனா வில்லியம்ஸுக்கும், இளம் அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டீபன்ஸுக்கும் இடையே நடந்த போட்டியைப் பார்த்தவர்கள் எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை. அப்படி ஒரு ஆட்டம். ஆனால் கடைசியில் செரீனா வீழ்த்தப்பட்டார்.

ஒருபக்கம் செரீனா போர்க் குதிரை போல புயல் வேகமாக ஆட, மறுபக்கம் அவர் செய்த ஒவ்வொரு தவறையும் அப்படியே திருப்பிப் போட்டு துவம்சம் செய்து விட்டார் ஸ்லோவன்.

இந்த இரு அமெரிக்க மங்கைகளின் ஆட்டத்தைப் பார்த்து அத்தனை பேரும் கலங்கிப் போய் விட்டனர். அப்படி ஒரு அருமையான ஆட்டம். முதல் செட்டில் செரீனாவின் கையே ஓங்கியிருந்தது. ஸ்லோவன் திணறியதைக் காண முடிந்தது. இதனால் 3-6 என்ற கணக்கில் செட்டை இழந்தார் ஸ்லோவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: