முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட சர்ச்சை: முஸ்லிம் அமைப்புகள் மனு

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - விஸ்வரூபம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக உள்துறை செயலாளரிடம் முஸ்லிம் அமைப்புகள் மனு அளித்தனர். கமல்ஹாசன் நடித்து நாளை வெளி வர இருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தி இருப்பதாக கூறி ஜவாருல்லா தலைமையில் முஸ்லிம் அமைப்புகள் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்தனர்.

விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளிவருமென அறிவித்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து முஸ்லிம் தலைவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டியதாகவும், அதில் அவர்கள் திருப்தி அடைந்ததாகவும் கமல் கூறியிருந்தார்.விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி  இந்திய தேசிய லீக் கட்சியினர் சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில்   குறிப்பிட்டுள்ளதாவது:-

கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

.விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி  கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாருல்லா நிருபர்களிடம் கூறுகையில் விஸ்வரூபம் படத்தை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும், நடிகர் கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட போவதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!