ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிக் இறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 26 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உல க நம்பர் -1 வீரரான நோவக் ஜோகோ விக் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். செர்பியாவின் முன்னணி வீரரான ஜோகோவிக் நேற்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு அரை இறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறு ம் வீரர் இறுதிச் சுற்றில் பங்கேற்பார். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிய நக ரமான மெல்போர்னில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக்கும், ஸ்பெயின் வீரரும் மோதினர். 

இந்தப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிக் அபாரமாக ஆடி, 6  -2, 6 -2, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

இந்தப் போட்டி சுமார் 89 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதில் செர்பிய வீரர் எளிதான வெற்றி பெற்றார். அவர் துவ க்கம்  முதலே இதில் ஆதிக்கம் செலுத் தி வெற்றி பெற்றார். 

மற்றொரு அரை இறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர் இறுதிச் சுற் றில் ஜோகோவிக்கை எதிர்கொள்வார். 

மகளிருக்கான இறுதிச் சுற்றில் உலக நம்பர் - 1 வீராங்கனையான விக்டோரி யா அசரென்காவும், சீன முன்னணி வீராங்கனையான லீநாவும் மோதுகின்றனர். 

கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி- பெட்ரோவா ஜோடியும், சானி யா மிர்சா - பாப் பிரையான் ஜோடி யும் கால் இறுதியில் தோல்வி அடைந் தன. முன்னதாக லியாண்டர் ஜோடி மற்றும் பொபண்ணா ஜோடி தோல்வி அடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: